கர்நாடகா சட்டசபையில் பசுவதை தடுப்பு மசோதா நிறைவேற்றப்பட்டது
கர்நாடக சட்டசபையில் கடும் அமளிக்கு மத்தியில் பசுவதை தடுப்பு மற்றும் பாதுகாப்பு மசோதா நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதாவை கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் பிரபு சவுகான் தாக்கல் செய்தார். இது தாக்கல் செய்யப்பட்ட உடனேயே காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள், எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா மற்றும் ஜே.டி (எஸ்) மாநிலத் தலைவர் எச்.கே.குமார்சாமி தலைமையிலான ஜனதா தளம் (எஸ்) சட்டமன்ற உறுப்பினர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
வணிக ஆலோசனைக் குழு கூட்டத்தில் இந்த மசோதா (Bill) விவாதிக்கப்படவில்லை என்று அவர்கள் குற்றம் சாட்டினர். ஆனால் இந்த குற்றச்சாட்டை சபாநாயகர் விஸ்வேஸ்வர ஹெக்தே காகேரி கடுமையாக மறுத்தார்.
ஆளும் பாஜக (BJP) இந்த மசோதாவை நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடாமல் நிறைவேற்றுவதற்கு கடுமையான ஆட்சேபனை தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா இது அரசியலமைப்புக்கு எதிரான நடவடிக்கை என்று குறிப்பிட்டார். இதனால் இன்றைய சட்டமன்ற கூட்டத்திலிருந்து காங்கிரஸ் வெளிநடப்பு செய்ய இது வழி வகுத்தது என அவர் குற்றம் சாட்டினார். ஜெ.டி.(எஸ்) கட்சியும் இந்த முடிவை எதிர்த்து வெளிநடப்பு செய்தது.
முன்னதாக கர்நாடகாவில் லவ் ஜிஹாத் (Love Jihad) மற்றும் பசுவதை தடுப்பு சட்டம் இயற்றும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளதாக கர்நாடக துணை முதல்வர் அஸ்வத்நாராயண் சனிக்கிழமையன்று தெரிவித்தார்.
அமைச்சரவைக் கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டது. இதைப் பற்றிய பேச்சு துவங்கியவுடனேயே எதிர்க்கட்சிகள் இதை எதிர்த்து பெரும் அமளியில் ஈடுபட்டனர்.
கர்நாடக (Karnataka) பசுவதை தடுப்பு மற்றும் கால்நடை பாதுகாப்பு மசோதா -2020 என அழைக்கப்படும் இந்த மசோதா மாநிலத்தில் பசுக்களை படுகொலை செய்வதற்கு மொத்த தடையும், கடத்தல், சட்டவிரோத போக்குவரத்து, பசுக்கள் மீதான அட்டூழியங்கள் மற்றும் படுகொலைகளில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனையும் கோருகிறது என்று பாஜக வட்டாரங்கள் செய்தி நிறுவனமான பி.டி.ஐ.-யிடம் தெரிவித்தனர்.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் விரைவான விசாரணைக்கு சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கால்நடைகளின் பாதுகாப்பிற்காக கோஷாலா அல்லது கால்நடை கொட்டகைகளை அமைப்பதற்கும் இது ஏற்பாடு செய்கிறது. இங்கு சோதனை நடத்த போலீசாருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த கால்நடைகளைப் பாதுகாப்பவர்களுக்கும் சட்டம் பாதுகாப்பு அளிக்கிறது.
கர்நாடக சட்டசபையில் (Karnataka Assembly) கடும் அமளி நிலவியதால், மசோதா எந்த விவாதமும் இல்லாமல் நிறைவேற்றப்பட்டது. பின்னர் காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தது.
Labels: states
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home