Thursday, December 17, 2020

Best Police Station: தமிழக காவல் நிலையத்துக்கு 2-வது இடம், கலக்கும் காக்கிச்சட்டை


 

நாட்டின் சிறந்த காவல் நிலையங்களுக்கான பட்டியலை மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தின் சேலம், உத்தரபிரதேசத்தில் மொராதாபாத் சத்தீஸ்கரில் சூரஜ்பூர், கோவாவின் தெற்கு கோவா, சிக்கிமில் கிழக்கு மாவட்டம் உள்ளிட்ட 10 காவல் நிலையங்கள் இந்த கௌரவத்தை பெற்றுள்ளன.

நாட்டின் மிகச் சிறந்த காவல் நிலையங்களுக்கான பட்டியலில் தமிழகம் (Tamil Nadu) இரண்டாவது இடத்தில் உள்ளது. சேலம் சிட்டி காவல் நிலையம் இந்த கௌரவத்தை பெற்றுள்ளது.

2020 ஆம் ஆண்டிற்கான நாட்டின் மிகச் சிறந்த 10 காவல் நிலையங்கள்:

1. தௌபால், மணிப்பூர்

2. சேலம் நகரம், தமிழ்நாடு

3. சாங்லாங், அருணாச்சல பிரதேசம்

4. சூரஜ்பூர், சத்தீஸ்கர்

5. தெற்கு கோவா, கோவா

6. வடக்கு மற்றும் மத்திய அந்தமான், அந்தமான் & நிக்கோபார் தீவுகள்

7. கிழக்கு மாவட்டம், சிக்கிம்

8. மொராதாபாத், உத்தர பிரதேசம்

9. தாத்ரா & நாகர் ஹவேலி,

10.கரீம்நகர், தெலுங்கானா

கொரோனா வைரஸ் (Corona Virus) தொற்று காரணமாக தொலைதூர பகுதிகளில் அமைந்துள்ள காவல் நிலையங்களை அணுகுவது அத்தனை சுலபமாக இருக்கவில்லை. எனினும், சிறந்த காவல் நிலையங்களுக்கான இந்த கணக்கெடுப்பு மிகவும் கடினமான சூழ்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகத்தால் நடத்தப்பட்டது.

இந்த பட்டியலில் பெயரிடப்பட்டுள்ள பல காவல் நிலையங்கள் சிறு நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் அமைந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா (Amit Shah) தெரிவித்தார்.

"முதல் 10 இடங்களைப் பிடித்த அந்த காவல் நிலையங்களுக்கும் இது பொருந்தும். வளங்களும் தேவையான வசதிகளும் கிடைப்பது முக்கியமானது என்றாலும், குற்றங்களைத் தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் தேசத்திற்கு சேவை செய்வதற்கும் காவல்துறை ஊழியர்களின் அர்ப்பணிப்பும் நேர்மையும் மிக முக்கியமானது என்பதை இது குறிக்கிறது," என்று அவர் கூறினார்.

மொத்தம் 16,671 காவல் நிலையங்கள் பட்டியலிடப்பட்டன. அவற்றில் தரவு பகுப்பாய்வு, நேரடி கண்காணிப்பு மற்றும் பொதுக் கருத்துகள் மூலம் முதல் 10 காவல் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டன.

சொத்து பிரச்சனைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கு எதிரான குற்றங்கள், காணாமல் போனவர்கள், அடையாளம் காணப்படாத நபர் மற்றும் அடையாளம் தெரியாத இறந்த உடல்கள் ஆகிய வழக்குகளின் விசாரணை மற்றும் தீர்வு ஆகியவற்றின் அடிப்படையில் காவல் நிலையங்கள் (Police Station) தரவரிசைப்படுத்தப்பட்டன.

ஆரம்பத்தில், 750 க்கும் மேற்பட்ட காவல் நிலையங்கள் உள்ள மாநிலங்களிலிருந்து தலா மூன்று காவல் நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. மற்ற அனைத்து மாநிலங்களிலிருந்தும் டெல்லியிலிருந்தும் இரண்டு காவல் நிலையங்களும் யூனியன் பிரதேசங்களிலிருந்து ஒரு காவல் நிலையமும் தேர்ந்தெடுக்கப்பட்டன.

தரவரிசை செயல்பாட்டின் அடுத்த கட்டத்திற்கு மொத்தம் 75 காவல் நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. இறுதி கட்டத்தில், சேவை வழங்கலின் தரங்களை மதிப்பிடுவதற்கும், காவல் துறை செயல்பாடுகளில் முன்னேற்றத்திற்கான நுட்பங்களை அடையாளம் காணவும் 19 அளவுருக்களை மத்திய அரசு நிர்ணயித்தது.

இதன் அடிப்படையில் மிகச் சிறந்த காவல் நிலையங்களாக 10 காவல் நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன.

 

 

Labels: ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home