Sunday, February 28, 2021

ஆஸ்திரேலியன் ஓபனில் 9-வது முறையாக ஜோக்கோவிச் சாம்பியன்: 18-வது கிராண்ட்ஸ்லாமை கைப்பற்றினார்

 


மெல்போர்னில் நடந்த ஆஸ்திரேலியன் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியில் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவில் செர்பிய வீரர் நோக் ஜோக்கோவிச் 9-வது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைபற்றியுள்ளார்.

ஆடவர்ஒற்றையர் பிரிவில்இன்று நடந்த இறுதிஆட்டத்தில் ரஷ்ய வீரர் டேனில் மெத்தவை வீழ்த்தி ஜோக்கோவிச் 18-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார்.

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டி நிறைவுக் கட்டத்தைஎட்டியுள்ளது. ஆடவர் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த இறுதி ஆட்டத்தில் நம்பர் ஒன் வீரர் நோவக் ஜோக்கோவிச்சை எதிர்த்து தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள ரஷ்ய வீரர் மெத்மதேவ் களம் கண்டார்.

இறுதிஆட்டத்தில் முதல் செட்டே இருவருக்கும்இடையே கடும் போராட்டமாக அமைந்தது. டைபிரேக்கரில் சென்ற முதல் செட்டை 7-5 என்ற கணக்கில் மெத்மதேவ் வென்றார். முதல் செட்டே இருவருக்கும் இடையே 45 நிமிடங்கள் நடந்தது.

 

ஆனால், சுதாரித்துக் கொண்ட செர்பிய வீரர் ஜோக்கோவிச் அடுத்த இரு செட்களையும் 2-6, 2-6 என்ற செட்களில் எளிதாக வென்று சாம்பியன் பட்டத்தைக் கைபற்றினார்.

இதன் மூலம் ஜோக்கோவிச் 9-வது ஆஸ்திரேலியன் ஓபன் பட்டத்தையும், தொடர்ந்து 3-வது முறையாக சாம்பியன் பட்டத்தையும் வென்ற பெருமையைப் பெற்றார். ஜோக்கோவிச் தனது டென்னிஸ் வாழ்க்கையில் பெறும் 18-வது கிராண்ட்ஸ்லாம் பட்டமாக இது அமைந்தது.

இதுவரை 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை ரோஜர் பெடரரும், ரஃபேல் நடாலும் மட்டுமே பெற்றுள்ளனர். அந்த வரையில் 18 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களுடன் ஜோக்கோவிச் 3-வது இடத்தில் உள்ளார்.

 

Labels:

கிருபானந்த வாரியாரின் பிறந்தநாள் அரசு விழா

 


கிருபானந்த வாரியாரின் பிறந்த நாளான ஆகஸ்ட் 25ம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதலமைச்சர்  அறிவித்துள்ளார்.

ஆன்மீக சொற்பொழிவு என்றால் பலருக்கும் முதலில் நினைவுக்கு வருபவர் திருமுருக கிருபானந்த வாரியார். வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த காங்கேயநல்லூரில் 1906ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி கிருபானந்த வாரியார் பிறந்தார். தந்தையிடம் இருந்து கல்வி, இசை, இலக்கியங்களை கற்றுக் கொண்ட வாரியார், எட்டு வயதிலேயே கவிபாடும் ஆற்றலை பெற்றார். பதினெட்டு வயதிலேயே சிறப்பாக சொற்பொழிவாற்ற தொடங்கி, முருகப்பெருமானின் மகிமையை தமிழ்நாடு முழுவதும் பரப்பிய பெருமைக்குரியவர்.

சொற்பொழிவு என்றால் கேட்பவர்களுக்கு அலுப்பு தட்டும் நிலையை மாற்றி, குட்டிக்கதைகளோடும், நகைச்சுவையோடும் கிருபானந்த வாரியார் ஆற்றிய ஆன்மீக சொற்பொழிவுகளுக்கு மக்களிடையே அமோக வரவேற்பு கிடைத்தது.

500க்கும் அதிகமான ஆன்மீக கருத்துக்களை கொண்ட கட்டுரைகளை இலக்கிய தரத்தோடும், தெளிவான நடையோடும் எழுதிய திருமுருக கிருபானந்த வாரியார் 64ஆவது நாயன்மாராக கருதப்படுகிறார்.

துணைவன், திருவருள், தெய்வம் போன்ற ஆன்மீக திரைப்படங்களிலும் நடித்த வாரியார், பட்டி தொட்டியெல்லாம் பிரபலமடைந்தார். ஏராளமான கோயில்களுக்கு திருப்பணி செய்து கொடுத்த கிருபானந்த வாரியார், உதவி புரிந்த கோயில்களின் எண்ணிக்கை எண்ணிலடங்காதவை.

முன்னாள் முதலமைச்சர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கு "பொன்மனச்செம்மல்" என்ற பட்டத்தை கிருபானந்த வாரியார் சூட்டி அழகுபார்த்தார்.


Labels:

காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டம்

 


காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டம் 62 ஆண்டுகளுக்கு பிறகு நிறை வேறுவதால் 7 மாவட்டங்களைச் சேர்ந்த 50 லட்சம் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந் துள்ளனர்.

வெள்ளக்காலங்களில் காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் 40 டி.எம்.சி. க்கு மேல் உபரி நீர் கடலில் கலக்கிறது. இந்த நீரை கால்வாய் மூலம் புதுக்கோட்டை, ஒன்றுபட்ட ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு கொண்டு வர, அக்காலத்திலேயே புதுக்கோட்டை தொண்டைமான், ராமநாதபுரம் சேதுபதி மன்னர்கள் முயற்சி செய்தனர்.

1933-ல் புதுக்கோட்டை நிர்வாக அலு வலராக இருந்த டாட்டன் ஹாமின் முயற்சி யால், மாயனுாரில் தென்துறை கால்வாய் திட்டம் தொடங்கப்பட்டது. ஆனால் கால் வாய் வெட்டும் பணி ஏனோ பாதியில் நிறுத்தப்பட்டது.

1954-ல் இத்திட்டம் குறித்து புதுக்கோட்டை எம்.பி. முத்துச்சாமி வல்லத்தரசு நாடாளுமன்றத்தில் பேசினார். இதையடுத்து 1958-ல் காவிரி, வைகை, குண்டாறு இணைப்புக் கால்வாய்த் திட்டத்துக்கு ரூ.189 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, அப்போதைய முதல்வர் காமராஜர் அடிக்கல் நாட்டினார். ஆனால் திட்டம் செயல்படுத்தாமல் கிடப்பில் போடப்பட்டது.

2008-ல் ரூ.3,290 கோடியில் காவிரி-வைகை-குண்டாறு நதிகளை இணைக்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது. அதன்படி கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மாயனுாரில் காவிரி நதியில் கதவணையும், அங்கிருந்து 255.60 கி.மீ.க்கு கால்வாயும் அமைக்கத் திட்டமிடப்பட்டது.

இந்த கால்வாய் கதவணையில் இருந்து 70 கி.மீ. தென்கிழக்கு திசையில் செல்லும். அதன் பின் வலது பக்கம் திரும்பி தென்மேற்கில் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி புதுப்பட்டி அருகே குண்டாறில் இணையும். இந்த கால்வாய் தொடக்கத்தில் 20 மீ., அகலம், 5 மீ. ஆழத்தில் இருக்கும். முடிவில் 6.4 மீ., அகலம் இருக்கும் எனக் கணக்கிடப்பட்டது. மேலும் 9 ரயில்வே பாலங்கள் உட்பட 144 பாலங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

இதன்மூலம் புங்கா ஆறு, நாப்பன்னை ஆறு, அரியாறு, காரையாறு, அக்கினி ஆறு,கொண்டாறு, வெள்ளாறு, பாம்பாறு, விருசுழி ஆறு, மணிமுத்தாறு, சருகணி ஆறு, உப்பாறு, வைகை, கிருதுமால் நதி, கானல் ஓடை, குண்டாறு என 15 நதிகள் இணைக்கப்படும். இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் காவிரி டெல்டா மாவட்டங்களில் வெள்ள அபாயம் நீங்கும். உபரிநீர் மூலம் கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், துாத்துக்குடி ஆகிய 7 மாவட்டங்களைச் சேர்ந்த 3,37,717 எக்டேர் (8.30 லட்சம் ஏக்கர்) நிலங்கள் பாசன வசதி பெறும். மேலும் 50 லட்சம் விவசாயிகள் பயன்பெறுவர். முதற் கட்டமாக 2008 ஜூனில் ரூ.234 கோடியில் மாயனுார் கதவணை அமைக்கப்பட்டு, 2014 ஜூன் 25-ல் திறக்கப்பட்டது. இந்த அணை மூலம் 1.05 டி.எம்.சி. நீரை சேமிக்க முடியும். வெள்ள காலங்களில் 4.83 லட்சம் கன அடி நீரை வெளியேற்ற முடியும். கதவணை திறந்தபிறகு கால்வாய் கட்டும் பணி தொடங்கவில்லை.

அதிக நிதி தேவைப்பட்டதால் மத்திய அரசிடம் நிதி கோரியும் வரவில்லை. இதையடுத்து தமிழக அரசே நிதி ஒதுக்கி காவிரி-வைகை-குண்டாறு திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென, விவசாயிகள் போராடி வந்தனர். இந்நிலையில் இத் திட்டத்தை ரூ.14 ஆயிரம் கோடி யில் செயல் படுத்தப் போவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும் முதற்கட்டமாக ரூ.700 கோடியை அரசு ஒதுக்கியது. புதுக் கோட் டை, கரூர் மாவட்டங்களில் கையகப் படுத்தப்பட்ட நிலங்களில் 11 கி.மீ.க்கு கால்வாய் வெட்டும் பணி மேற்கொள்ள ரூ. 331 கோடிக்கு ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை குன் னத்தூரில் இருந்து கவிநாடு வெள்ளாறு வரை 52 கி.மீ.க்கு நிலம் கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் 7 மாவட்டங்களைச் சேர்ந்த 50 லட்சம் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் ஆதிமூலம் கூறியதாவது:

காவிரி-வைகை-குண்டாறு திட்டத்தை செயல்படுத்தினால் வறட்சியை தடுக்கலாம். கடந்த காலங்களை போல் அறிவிப்போடு போகாமல், மத்திய அரசு நிதி உதவி அளித்து திட்டத்தை செயல்படுத்த வேண்டும். மேலும் சிவகங்கை மாவட்டத்தில் விடுபட்ட பகுதிகளையும் இத்திட்டத்தில் இணைக்க வேண்டும். நீர் பங்கீட்டு முறையையும் வரையறுக்க வேண்டும் என்று கூறினார்.

பயன்பெறும் வட்டங்கள்

கரூர் : குளித்தலை, கிருஷ்ணராயபுரம்.
திருச்சி : திருச்சி, ஸ்ரீரங்கம்.
புதுக்கோட்டை : புதுக்கோட்டை, கந்தர்வக்கோட்டை, ஆலங்குடி, திருமயம், குளத்துார், அறந்தாங்கி, ஆவுடையார்கோவில்.
சிவகங்கை : காரைக்குடி, தேவகோட்டை, திருப்புத்தூர், சிவகங்கை, காளையார்கோவில், திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடி.
ராமநாதபுரம் : திருவாடானை, பரமக்குடி, கமுதி, கடலாடி, முதுகுளத்துார், ராமநாதபுரம்.
விருதுநகர்: திருச்சுழி, காரியாபட்டி, அருப்புக்கோட்டை தாலுகாக்கள்.
துாத்துக்குடி: விளாத்திக்குளம் தாலுகா.

Labels:

ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா மற்றும் கல்லூரி

ஆசியாவிலேயே மிகப்பெரியதாக கருதப்படும் கால்நடை பூங்காவை, சேலம் மாவட்டம் தலைவாசல் அருகில் விருத்தாசலம் கூட்டுரோட்டில் நிறுவியுள்ளது தமிழக அரசு. இந்த பூங்காவானது 1,002 ஏக்கர் பரப்பளவில் 1022 கோடி ரூபாயில் பல்வேறு வசதிகளுடன் உருவாகி வருகிறது.


 

கால்நடை பூங்காவின் முக்கிய அங்கமாகக் கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் அமைந்துள்ளது. இந்த மருத்துவக் கல்லூரியை சமீபத்தில் துவக்கி வைத்த பின்பு, அதில் மாணவர்கள் சேர்க்கைக்கான ஆணையை வழங்கினார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

இந்த கால்நடை பூங்கா குறித்து தமிழக கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், "இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் தொடர்ந்து கால்நடைகளின் எண்ணிக்கை அதிகரித்து முதலிடத்தில் உள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாட்டில் கறவை மாடுகளின் எண்ணிக்கை 7.4 சதவிகிதமும், வெள்ளாடுகள் 17 சதவிகிதமும், கோழிகளின் எண்ணிக்கை 2.84 சதவிகிதமும் அதிகரித்திருக்கிறது. தற்போது தமிழ்நாட்டில் நான்கு கால்நடை மருத்துவக் கல்லூரிகளும், ஒரு கோழி மருத்துவ ஆராய்ச்சி மையமும் செயல்பட்டு வருகின்றன. புதியதாக, உடுமலைப்பேட்டையிலும், தேனியிலும் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் துவங்கப்பட்டுள்ளன.

 

ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, ஒரே ஆண்டில் இங்கு கால்நடை மருத்துவ கல்லூரியும், ஆராய்ச்சி மையமும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கல்லூரியில் வெளிநாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் உள்ளது போன்று அனைத்து வசதிகளும் உள்ளன" என்றார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "அமெரிக்காவில் உள்ள பஃபல்லோ மாட்டுப்பண்ணையில் ஒரு பசு மாடு ஒரு நாளைக்குச் சராசரியாக 65 லிட்டர் பால் கொடுக்கிறது. நம் ஊரில் கலப்பின பசுக்கள் மிகக் குறைந்தளவே பால் கொடுக்கின்றன. குறைந்தது 35 முதல் 40 லிட்டர் பால் தரும் மாடுகளை நாம் உருவாக்கினால் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும். அதிக பால் தரும் கலப்பின மாடுகளை உருவாக்கவும், அதை விவசாயிகளுக்கு வழங்கும் பணியே இந்த கால்நடை பூங்காவின் முதன்மையான நோக்கமாக இருக்கும். இந்த கால்நடை பூங்காவுக்குத் தேவையான நீரைக் காவிரி ஆற்றிலிருந்து 260 கோடி ரூபாய் செலவில் தனியே பைப்லைன் மூலம் கொண்டு வரப்படுகிறது" என்றார்.

கால்நடை பூங்காவின் சிறப்பம்சம் என்ன?

"புதிய கால்நடை பூங்காவானது கால்நடை அறிவியல் கல்வி மட்டுமல்லாது விரிவாக்கப் பணிகளையும் பெருமளவில் மேற்கொள்ளும். மேலும், தமிழ்நாட்டில் உள்ள கால்நடை ஆராய்ச்சி மையங்களையும், தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் உள்ள கால்நடை ஆராய்ச்சி மையங்களின் ஒருங்கிணைந்த இணைப்பு மையமாகவும் செயல்படும்" என்கிறார் கால்நடைத் துறையின் முதன்மைச் செயலர் கோபால்.

இவர், "இங்கு உயர் ரக கலப்பின பசுக்களை உற்பத்தி செய்தல், அதி நவீன ஆராய்ச்சி கூடங்கள் அமைத்தல், கால்நடைகளைச் சிறந்த முறையில் பராமரிப்பதற்கான ஆய்வுகளையும், கருவிகளையும் மேம்படுத்துதல், கால்நடை அறிவியல் துறையில் சேரும் மாணவர்களுக்கு வெளிநாட்டுக்கு இணையான கல்வியை வழங்குதல் உள்பட்ட பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய வகையில் இந்த கால்நடை பூங்கா வடிவமைப்பைப் பெற்றுள்ளது

கால்நடைத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், " தற்போது சத்தியமங்கலத்தில் உள்ள காங்கேயம் காளை ஆராய்ச்சி மையம் மற்றும், உம்பளச்சேரி, ஆலம்பாடி, புலிக்குளம், பர்கூர் ஆகிய உள்நாட்டு மாட்டு இனங்களின் பாதுகாப்பு, இனப்பெருக்கப் பண்ணையும் கால்நடை பூங்காவில் அமைய உள்ளது. மேலும், செம்மறி ஆடு, வெள்ளாடு, பன்றி, கோழி இனங்களின் பிரிவுகளுக்கான ஏற்படுத்தப்பட்டுள்ளன " என்றார்.

இங்கு, விவசாயிகள் நேரடியாகக் கலப்பின ரக மாடுகளையும், கன்றுகளையும் பெற்றுக்கொள்ளலாம். இந்த பூங்காவிலேயே ஆடு வளர்ப்பு, மீன் வளர்ப்பு மற்றும் கோழி வளர்ப்பு குறித்த ஆராய்ச்சிகளும், பயிற்சி வழங்கவும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக, தனித்தனியே மிகப்பெரிய அளவில் கட்டட வசதிகளும், ஆய்வக வசதிகளும் உள்ளன.

பால், இறைச்சி, மீன், முட்டை போன்றவற்றைப் பாதுகாத்துப் பதப்படுத்துதல், அவற்றிலிருந்து உபபொருட்கள், மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பு போன்ற பிரிவுகளில் ஆராய்ச்சி மேற்கொள்ளத் தனிப்பிரிவுகள் உள்ளன.

தற்போது தொடங்கப்பட்டுள்ள கால்நடை கல்லூரிக்கு தேவையான நவீன வகுப்பறைகள், நூலகம், எட்டு கல்விசார் கட்டிடங்கள், கால்நடை இனப்பெருக்கம் மற்றும் ஈனியல் துறை, கால்நடை சிகிச்சையியல் துறை, கால்நடை உற்பத்தி மேலாண்மைத் துறை, கால்நடை மருந்தியல் துறை, கால்நடை உணவியல் துறை, இனவிருத்தி துறை, நுண்ணுயிரியல்துறை, விரிவாக்க மையம், மாணவர் விடுதி, ஆசிரியர்கள் குடியிருப்பு, விருந்தினர் மாளிகை, பால் வள அறிவியல் வளாகம், இறைச்சி அறிவியல் வளாகம், கால்நடை பண்ணை வளாகம், உணவகம் ஆகியவை கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

 ஒட்டுமொத்த பார்க்கையில் இந்த கால்நடை பூங்காவானது ஒருங்கிணைந்த மிகப்பெரிய கால்நடை ஆராய்ச்சி பல்கலைக்கழகமாகவே காட்சியளிக்கிறது.

 

 

Labels:

அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 60ஆக உயர்வு

 


அரசு ஊழியர்கள், அரசு சார்ந்த துறைகளில் பணியாற்றும் ஊழியர்களின் ஓய்வு வயது 59 -லிருந்து 60 ஆக உயர்த்தி முதல்வர் நேற்று அறிவித்திருந்த நிலையில் அதற்கான அரசாணை வெளியிடப்பட்டது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள், பணியிலிருந்து ஒய்வு பெறும் வயது, 58-லிருந்து 59 ஆக உயர்த்தி கடந்த ஆண்டு மே மாதம் உத்தரவின் பேரில், அரசாணை வெளியிடப்பட்டது. அரசுப் பணியாளர்களின் ஒய்வு பெறும் வயது தற்போது அமலில் உள்ள 59 வயது என்பது, 60 வயதாக உயர்த்தப்படும் என நேற்று சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி 110 வது விதியின் கீழ் அறிவித்தார்.

இந்த அறிவிப்பு தற்போது அரசாணையாக வெளியாகியுள்ளது. அந்த அரசாணையில் வெளியிடப்பட்ட உத்தரவு வருமாறு:

நேற்று (பிப்.25) சட்டப்பேரவையில் முதல்வர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் பணியிலிருந்து ஒய்வு பெறும் வயது, 58-லிருந்து 59 ஆக உயர்த்தி கடந்த ஆண்டு மே மாதம் உத்தரவிடப்பட்டது, அரசாணை வெளியிடப்பட்டது. அரசுப் பணியாளர்களின் ஒய்வு பெறும் வயது தற்போது அமலில் உள்ள 59 வயது என்பது, 60 வயதாக உயர்த்தப்படும்.

இது அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், அரசியலமைப்பு மற்றும் சட்டரீதியான அமைப்புகள், அரசு நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், வாரியங்கள், ஆணையங்கள், சங்கங்கள் உள்ளிட்ட அனைத்துப் பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்துப் பணியாளர்கள் அனைவருக்கும் பொருந்தும்.

இந்த உத்தரவு, தற்போது அரசுப் பணியில் இருக்கும் அனைவருக்கும் மற்றும் இந்த ஆண்டு, அதாவது மே.31/2021 அன்று பணியில் இருந்து ஓய்வு பெறும் பணியாளர்களுக்கும் பொருந்தும் என அறிவித்தார்.

அதன்படி வரும் மே மாதம் முதல் இது அமலுக்கு வருகிறது. இந்த அறிவிப்பு ஆசிரியர் ஆசிரியர் பணியில் இல்லாத ஊழியர்கள், அரசு கல்வி நிறுவனங்கள், அரசு உதவிப்பெறும் கல்வி நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள், அரசியலமைப்பு மற்றும் சட்டரீதியான துறைகள், பொதுத்துறையின் கீழ் வரும் அனைத்து உள்ளாட்சி அமைப்புகள், மாநகராட்சிகள், சொசைட்டிகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் பொருந்தும்”.

இவ்வாறு அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Labels:

வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு: தமிழக சட்டசபையில் மசோதா நிறைவேறியது

 


மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள்இடஒதுக்கீடு வழங்கியும், 93 சாதியினருக்கு 7 சதவீதம் உள் ஒதுக்கீடும், எஞ்சியுள்ள  பிரிவினருக்கு 2.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கியும் சட்டப்பேரவையில் மசோதா ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

மிகவும் பிற்படுத்தப்பட்டோரில் இதர பிரிவினருக்கு 2.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கவும் மசோதா வழிவகை செய்கிறது. வன்னியர்களுக்கான தனி ஒதுக்கீடு  தற்காலிகமானது, சாதிகள் குறித்த விவரம் சேகரிப்பு பணிக்கு பின் 6 மாதம் கழித்து மாற்றியமைக்கப்படும் என்று முதல்வர் தெரிவித்தார். 

பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ள 20 சதவீத இடஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம், சீர்மரபினருக்கு 7 சதவீதம் உள்ஒதுக்கீடு  செய்யப்படுகிறது. 7 சதவீதம் உள்ஒதுக்கீட்டைப் பெறவுள்ள சீர்மரபினர் பிரவில் 68 உட்பிரிவுகள் உள்ளன என்றார். தொடர்ந்து, மசோதா ஒருமனதாக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.

Labels:

Tuesday, February 23, 2021

ஸ்ரீவில்லிபுத்தூர், மேகமலை.. உருவானது நாட்டின் 21-வது புலிகள் காப்பகம்

 


தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள மேகமலை வனப்பகுதி, பல்வேறு அரிய உயிரினங்களைக் கொண்டது. 626 ச.கி.மீ பரப்பளவுள்ள மேகமலையைப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில், அதை வன உயிரின சரணாலயமாக அறிவித்தது மத்திய அரசு. இந்நிலையில், மேகமலை வனப்பகுதியில் புலிகள் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வந்த நிலையில், அருகே உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் சாம்பல் நிற அணிகள் சரணாலயத்தையும் மேகமலையையும் இணைத்து புலிகள் காப்பகம் உருவாக்க வேண்டும் என வன விலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர்.

மேகமலையில் 8 புலிகள் மட்டுமே இருந்த சூழலில், 2018-ம் ஆண்டு நடந்த புலிகள் கணக்கெடுப்பில் 11 பெண் புலிகள், 3 ஆண் புலிகள் என மொத்தம் 14 புலிகள் மேகமலையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், மாவட்ட வனத்துறையும் மேகமலையை புலிகள் காப்பகமாக மாற்ற பரிந்துரைத்தது. அதற்கான பணிகளும் வேகமெடுக்கத் தொடங்கியது.

தற்போது, ஸ்ரீவில்லிபுத்தூர் சாம்பல் நிற அணிகள் சரணாலயத்தையும், மேகமலை வன உயிரின சரணாலயத் தையும் இணைத்து, நாட்டின் 51வது புலிகள் காப்பகமாக அறிவித்துள்ளது மத்திய அரசு. இதனால், வன விலங்கு ஆர்வலர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இது தொடர்பாகக் கருத்து தெரிவிக்கும் வன விலங்கு ஆர்வலர்கள், ``ஒரு காடு வளமாக இருக்கிறதா என்பதை அறிய, அங்குள்ள யானைகள், புலிகளைக் கணக்கிட்டாலே போதும். அவைதான் காட்டை சமநிலையில் வைத்துள்ளன. ஒரு குறிப்பிட்ட எல்லையை வகுத்துக்கொண்டு அதற்குள் வாழும் குணம் கொண்டது புலிகள். அந்த வகையில், மேகமலை போலவே, அருகே உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் சாம்பல் நிற அணிகள் சரணாலய வனப்பகுதிகளிலும் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எனவேதான், மேகமலை - ஸ்ரீவில்லிபுத்தூர் வனப்பகுதிகளை இணைத்து புலிகள் காப்பகம் அமைக்கப்பட வேண்டும் எனக் கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாகக் கோரிக்கைகளை வைத்துக்கொண்டிருந்தோம். தற்போது மத்திய அரசு அனுமதியளித்திருப்பது எங்களுக்கு பெருமகிழ்ச்சி” என்றனர்.

Labels: ,

ஈரநில பாதுகாப்பு மற்றும் மேலாண்மைக்கான முதல் மையத்தை இந்தியா அமைத்துள்ளது

 



உலக ஈரநில தினத்தன்றுஈரநில பாதுகாப்புபுத்தாக்கம் மற்றும் மேலாண்மைக்கான தனது உறுதியின் ஒரு பகுதியாகஈரநில பாதுகாப்பு மற்றும் மேலாண்மைக்கான முதல் மையத்தை இந்தியா அமைத்துள்ளது

இது குறித்த அறிவிப்பை மத்திய சுற்றுச்சூழல்வனம் மற்றும் பருவநிலை மாற்றம் இணை அமைச்சர் திரு பாபுல் சுப்ரியோ இன்று வெளியிட்டார்அமைச்சகத்தின் கீழ் சென்னையில் இயங்கும் நீடித்த கடலோர மேலாண்மைக்கான தேசிய மையத்தின் ஒரு பகுதியாகஈரநில பாதுகாப்பு மற்றும் மேலாண்மைக்கான மையம் திகழும்.

 

ஈரநிலங்களின் முக்கியத்துவம் குறித்து இம்மையத்தின் தொடக்க விழாவில் பேசிய அமைச்சர்பல்வேறு சூழலியல் சேவைகளை ஈரநிலங்கள் சிறப்பாக ஆற்றி வருவதாக கூறினார்.

இன்று தொடங்கப்பட்டுள்ள பிரத்தியேக மையம்குறிப்பிட்ட ஆராய்ச்சி தேவைகள் மற்றும் அறிவுசார் இடைவெளிகளை பூர்த்தி செய்வதோடுஈரநிலங்களின் பாதுகாப்புமேலாண்மை மற்றும் செயல்மிகு பயன்பாட்டில் முக்கிய பங்காற்றும்,” என்று கூறினார்.

மேலும் விவரங்களுக்குஇந்த ஆங்கில செய்தி குறிப்பை பார்க்கவும்:


https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1694463

Labels: ,

தமிழக அரசின் புதிய தலைமை செயலாளராக ராஜீவ் ரஞ்சன் நியமனம்



தமிழக அரசின் தலைமைச் செயலாளர் பொறுப்பில் இருந்து சண்முகம் நேற்றுடன் ஓய்வு பெற்றார். இந்த நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் புதிய தலைமை செயலாளராக ராஜீவ் ரஞ்சன் பொறுப்பேற்றுக்கொண்டார்.


தமிழக அரசின் 47வது தலைமைச் செயலாளராக ராஜீவ் ரஞ்சன் பொறுப்பேற்றுக்கொண்டார்.



மத்திய அரசின் மீன்வளம்,  கால்நடை பால்வள அமைச்சக அலுவலக செயலாளராக பணியாற்றிய  நிலையில் தலைமை செயலாளராக பொறுப்பேற்றார். தமிழக அரசின் பல்வேறு முக்கிய பொறுப்புகளிலும் ராஜீவ் ரஞ்சன் இருந்துள்ளார்.

Labels: ,

முஷ்டாக் அலி டி20: கோப்பை வென்றது தமிழ்நாடு அணி!

 



சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் தமிழ்நாடு அணி கோப்பை வென்று அசத்தியுள்ளது


மொத்தம் 38 அணிகள் பங்கேற்ற இந்தியாவின் மிகப்பெரிய டி20 கிரிக்கெட் தொடரான சையத் முஷ்டாக் அலி டி20 கோப்பை தொடர் ஜனவரி 10ஆம் தேதி துவங்கி, ஜனவரி 31ஆம் தேதி நிறைவடைந்தது. இறுதிப் போட்டியில் தமிழ்நாடு, பரோடா அணிகள் பலப்பரீட்சை நடத்திய நிலையில் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் தமிழ்நாடு அணி வெற்றிபெற்று அசத்தியுள்ளது.

உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடரான சையது முஸ்தாக் அலி டிராஃபியின் இறுதி போட்டியில் தமிழ்நாடு - பரோடா அணிகள் மோதின. அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதை தொடர்ந்து களமிறங்கிய பரோடா அணி தமிழ்நாடு அணியின் மிரட்டலான பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்களை வீழ்த்தி தடுமாறியது. பரோடா அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 120 ரன்கள் மட்டுமே எடுத்தது. தமிழ்நாடு அணி சார்பில் மணிமாறன் சித்தார்த் சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்களை வீழ்த்தினார்.


இதையடுத்து 121 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய தமிழ்நாடு அணி 18 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து இலக்கை எட்டி கோப்பையை வென்றது. இறுதிப் போட்டியில் தமிழ்நாடு அணி வெற்றி முக்கிய வீரராக இருந்த மணிமாறன் ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.

Labels: ,

Thursday, December 17, 2020

Best Police Station: தமிழக காவல் நிலையத்துக்கு 2-வது இடம், கலக்கும் காக்கிச்சட்டை


 

நாட்டின் சிறந்த காவல் நிலையங்களுக்கான பட்டியலை மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தின் சேலம், உத்தரபிரதேசத்தில் மொராதாபாத் சத்தீஸ்கரில் சூரஜ்பூர், கோவாவின் தெற்கு கோவா, சிக்கிமில் கிழக்கு மாவட்டம் உள்ளிட்ட 10 காவல் நிலையங்கள் இந்த கௌரவத்தை பெற்றுள்ளன.

நாட்டின் மிகச் சிறந்த காவல் நிலையங்களுக்கான பட்டியலில் தமிழகம் (Tamil Nadu) இரண்டாவது இடத்தில் உள்ளது. சேலம் சிட்டி காவல் நிலையம் இந்த கௌரவத்தை பெற்றுள்ளது.

2020 ஆம் ஆண்டிற்கான நாட்டின் மிகச் சிறந்த 10 காவல் நிலையங்கள்:

1. தௌபால், மணிப்பூர்

2. சேலம் நகரம், தமிழ்நாடு

3. சாங்லாங், அருணாச்சல பிரதேசம்

4. சூரஜ்பூர், சத்தீஸ்கர்

5. தெற்கு கோவா, கோவா

6. வடக்கு மற்றும் மத்திய அந்தமான், அந்தமான் & நிக்கோபார் தீவுகள்

7. கிழக்கு மாவட்டம், சிக்கிம்

8. மொராதாபாத், உத்தர பிரதேசம்

9. தாத்ரா & நாகர் ஹவேலி,

10.கரீம்நகர், தெலுங்கானா

கொரோனா வைரஸ் (Corona Virus) தொற்று காரணமாக தொலைதூர பகுதிகளில் அமைந்துள்ள காவல் நிலையங்களை அணுகுவது அத்தனை சுலபமாக இருக்கவில்லை. எனினும், சிறந்த காவல் நிலையங்களுக்கான இந்த கணக்கெடுப்பு மிகவும் கடினமான சூழ்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகத்தால் நடத்தப்பட்டது.

இந்த பட்டியலில் பெயரிடப்பட்டுள்ள பல காவல் நிலையங்கள் சிறு நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் அமைந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா (Amit Shah) தெரிவித்தார்.

"முதல் 10 இடங்களைப் பிடித்த அந்த காவல் நிலையங்களுக்கும் இது பொருந்தும். வளங்களும் தேவையான வசதிகளும் கிடைப்பது முக்கியமானது என்றாலும், குற்றங்களைத் தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் தேசத்திற்கு சேவை செய்வதற்கும் காவல்துறை ஊழியர்களின் அர்ப்பணிப்பும் நேர்மையும் மிக முக்கியமானது என்பதை இது குறிக்கிறது," என்று அவர் கூறினார்.

மொத்தம் 16,671 காவல் நிலையங்கள் பட்டியலிடப்பட்டன. அவற்றில் தரவு பகுப்பாய்வு, நேரடி கண்காணிப்பு மற்றும் பொதுக் கருத்துகள் மூலம் முதல் 10 காவல் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டன.

சொத்து பிரச்சனைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கு எதிரான குற்றங்கள், காணாமல் போனவர்கள், அடையாளம் காணப்படாத நபர் மற்றும் அடையாளம் தெரியாத இறந்த உடல்கள் ஆகிய வழக்குகளின் விசாரணை மற்றும் தீர்வு ஆகியவற்றின் அடிப்படையில் காவல் நிலையங்கள் (Police Station) தரவரிசைப்படுத்தப்பட்டன.

ஆரம்பத்தில், 750 க்கும் மேற்பட்ட காவல் நிலையங்கள் உள்ள மாநிலங்களிலிருந்து தலா மூன்று காவல் நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. மற்ற அனைத்து மாநிலங்களிலிருந்தும் டெல்லியிலிருந்தும் இரண்டு காவல் நிலையங்களும் யூனியன் பிரதேசங்களிலிருந்து ஒரு காவல் நிலையமும் தேர்ந்தெடுக்கப்பட்டன.

தரவரிசை செயல்பாட்டின் அடுத்த கட்டத்திற்கு மொத்தம் 75 காவல் நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. இறுதி கட்டத்தில், சேவை வழங்கலின் தரங்களை மதிப்பிடுவதற்கும், காவல் துறை செயல்பாடுகளில் முன்னேற்றத்திற்கான நுட்பங்களை அடையாளம் காணவும் 19 அளவுருக்களை மத்திய அரசு நிர்ணயித்தது.

இதன் அடிப்படையில் மிகச் சிறந்த காவல் நிலையங்களாக 10 காவல் நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன.

 

 

Labels: ,