Saturday, February 27, 2021

ஆசியாவின் முதல் வனவிலங்கு பாதுகாப்பு நடைபாதை

 


 

டெல்லி-டேராடூன் அதிவேக நெடுஞ்சாலையை வனவிலங்குகள்  கடக்க  பிரத்யேக மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

வனவிலங்குகள் இந்த அதிவேக நெடுஞ்சாலையை கடக்க 12 கி.மீ தூரத்திற்கு மேம்பாலம் ஒன்று அமைக்கப்ப்பட்டுள்ளது.

இதுவே ஆசியாவின் முதல்(wildlife protection corridor) வனவிலங்கு பாதுகாப்பு நடைபாதை.

 


Labels: ,

உலகின் முதல் Energy Island : டென்மார்க்

 


 

 

ஐரோப்பாவின் மின் தேவையை பூர்த்திசெய்ய டென்மார் அரசு செயற்கையான தீவு ஒன்றை உருவாக்க முடிவெடுத்துள்ளது.

இந்த ஆற்றல்  தீவானது 30 லட்ச மக்களின் மின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் பசுமை ஆற்றலை உருவாக்கி சேமித்து வைக்கும் திறன் கொண்டிருகும்

Labels: ,

Tuesday, February 23, 2021

ஸ்ரீவில்லிபுத்தூர், மேகமலை.. உருவானது நாட்டின் 21-வது புலிகள் காப்பகம்

 


தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள மேகமலை வனப்பகுதி, பல்வேறு அரிய உயிரினங்களைக் கொண்டது. 626 ச.கி.மீ பரப்பளவுள்ள மேகமலையைப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில், அதை வன உயிரின சரணாலயமாக அறிவித்தது மத்திய அரசு. இந்நிலையில், மேகமலை வனப்பகுதியில் புலிகள் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வந்த நிலையில், அருகே உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் சாம்பல் நிற அணிகள் சரணாலயத்தையும் மேகமலையையும் இணைத்து புலிகள் காப்பகம் உருவாக்க வேண்டும் என வன விலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர்.

மேகமலையில் 8 புலிகள் மட்டுமே இருந்த சூழலில், 2018-ம் ஆண்டு நடந்த புலிகள் கணக்கெடுப்பில் 11 பெண் புலிகள், 3 ஆண் புலிகள் என மொத்தம் 14 புலிகள் மேகமலையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், மாவட்ட வனத்துறையும் மேகமலையை புலிகள் காப்பகமாக மாற்ற பரிந்துரைத்தது. அதற்கான பணிகளும் வேகமெடுக்கத் தொடங்கியது.

தற்போது, ஸ்ரீவில்லிபுத்தூர் சாம்பல் நிற அணிகள் சரணாலயத்தையும், மேகமலை வன உயிரின சரணாலயத் தையும் இணைத்து, நாட்டின் 51வது புலிகள் காப்பகமாக அறிவித்துள்ளது மத்திய அரசு. இதனால், வன விலங்கு ஆர்வலர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இது தொடர்பாகக் கருத்து தெரிவிக்கும் வன விலங்கு ஆர்வலர்கள், ``ஒரு காடு வளமாக இருக்கிறதா என்பதை அறிய, அங்குள்ள யானைகள், புலிகளைக் கணக்கிட்டாலே போதும். அவைதான் காட்டை சமநிலையில் வைத்துள்ளன. ஒரு குறிப்பிட்ட எல்லையை வகுத்துக்கொண்டு அதற்குள் வாழும் குணம் கொண்டது புலிகள். அந்த வகையில், மேகமலை போலவே, அருகே உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் சாம்பல் நிற அணிகள் சரணாலய வனப்பகுதிகளிலும் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எனவேதான், மேகமலை - ஸ்ரீவில்லிபுத்தூர் வனப்பகுதிகளை இணைத்து புலிகள் காப்பகம் அமைக்கப்பட வேண்டும் எனக் கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாகக் கோரிக்கைகளை வைத்துக்கொண்டிருந்தோம். தற்போது மத்திய அரசு அனுமதியளித்திருப்பது எங்களுக்கு பெருமகிழ்ச்சி” என்றனர்.

Labels: ,

Swatch-Delhi : மின்சார வாகனங்களை ஊக்குவிக்க




மின்சார வாகனங்களின் பயன்பாட்டை  ஊக்குவிக்க டெல்லி முதல்வர் துவக்கியுள்ள சுவச்- டெல்லி எனும் பிரச்சார முன்னெடுப்பை துவக்கியுள்ளார்.

இதன் மூலம் 2024 ஆம் ஆண்டிற்குள் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை 25% வரை உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளது.

Labels: ,

ஈரநில பாதுகாப்பு மற்றும் மேலாண்மைக்கான முதல் மையத்தை இந்தியா அமைத்துள்ளது

 



உலக ஈரநில தினத்தன்றுஈரநில பாதுகாப்புபுத்தாக்கம் மற்றும் மேலாண்மைக்கான தனது உறுதியின் ஒரு பகுதியாகஈரநில பாதுகாப்பு மற்றும் மேலாண்மைக்கான முதல் மையத்தை இந்தியா அமைத்துள்ளது

இது குறித்த அறிவிப்பை மத்திய சுற்றுச்சூழல்வனம் மற்றும் பருவநிலை மாற்றம் இணை அமைச்சர் திரு பாபுல் சுப்ரியோ இன்று வெளியிட்டார்அமைச்சகத்தின் கீழ் சென்னையில் இயங்கும் நீடித்த கடலோர மேலாண்மைக்கான தேசிய மையத்தின் ஒரு பகுதியாகஈரநில பாதுகாப்பு மற்றும் மேலாண்மைக்கான மையம் திகழும்.

 

ஈரநிலங்களின் முக்கியத்துவம் குறித்து இம்மையத்தின் தொடக்க விழாவில் பேசிய அமைச்சர்பல்வேறு சூழலியல் சேவைகளை ஈரநிலங்கள் சிறப்பாக ஆற்றி வருவதாக கூறினார்.

இன்று தொடங்கப்பட்டுள்ள பிரத்தியேக மையம்குறிப்பிட்ட ஆராய்ச்சி தேவைகள் மற்றும் அறிவுசார் இடைவெளிகளை பூர்த்தி செய்வதோடுஈரநிலங்களின் பாதுகாப்புமேலாண்மை மற்றும் செயல்மிகு பயன்பாட்டில் முக்கிய பங்காற்றும்,” என்று கூறினார்.

மேலும் விவரங்களுக்குஇந்த ஆங்கில செய்தி குறிப்பை பார்க்கவும்:


https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1694463

Labels: ,

Sunday, December 20, 2020

முதன்முறையாக.. பலூனில் பறந்து சென்று.. விலங்குகளை ரசிக்கும் வசதி

 


நாட்டிலேயே முதன்முறையாக மத்தியப் பிரதேசத்தின் உள்ள தேசிய பூங்காவில் வெப்பக்காற்று நிரம்பிய பலூனில் பறந்து சென்று வன விலங்குகளை கண்டுகளிக்கும் வசதி தொடங்கப்பட்டுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் உமரியா மாவட்டத்தில் 716 சதுரக் கிலோமீட்டர் பரப்பளவில் பாந்தவ்கர் தேசியப் பூங்கா உள்ளது. இங்கு, புலி, சிறுத்தை, மான் உள்ளிட்ட பல்வேறு விலங்கினங்களின் வாழ்விடமாக இந்தப் பூங்கா உள்ளது.

இந்நிலையில், இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக, வெப்பக்காற்று நிரம்பிய பலூனில் பறந்துசென்று பூங்காவின் இயற்கை எழிலையும், விலங்குகளையும் கண்டுகளிக்கும் வசதி தொடங்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே முதன்முறையாக விலங்குகள் சரணாலயத்தில் பறந்து கொண்டே விலங்குகளை ரசிக்கும் திட்டம் இங்கு தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Labels:

Sunday, December 13, 2020

Eco Bridge: விலங்குகள் சாலையை கடக்க உதவும் பாதுகாப்புப் பாலம்


 

உத்தரகண்ட் வனத்துறை விலங்குகள் சாலைகளை கடக்க உதவும் வகையில் 'சுற்றுசூழல் பாலம்' (Eco Bridge) என்று அழைக்கப்படும் இருவழி தொங்கு பாலத்தை உருவாக்கியுள்ளது. நைனிடால் நெடுஞ்சாலையின் குறுக்கே மரங்களுக்கு இடையே இந்த சிறப்புவகைப் பாலம் கட்டப்பட்டுள்ளது. வகையான பாலத்தை கட்டியுள்ளது.

இந்த சுற்றுச்சூழல் பாலம் 90 அடி நீளமுள்ள மூங்கில், சணல் மற்றும் புல் ஆகியவற்றைக் கொண்டு கட்டப்பட்டுள்ளது இந்த 'சுற்றுசூழல் பாலம்' (Eco Bridge) . வெறும் 10 நாட்களில் 2 லட்சம் ரூபாய் செலவில் இந்தப் பாலம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த தொங்கு பாலம் கட்டப்பட்டிருக்கும் நெடுஞ்சாலை, நைனிடாலுக்கு (Nainital) செல்வதற்கான முக்கிய பாதையாகும். Kaladhungi-Nainital நெடுஞ்சாலையை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் பயன்படுத்துகின்றனர். அதிலும் சுற்றுலா (tourist) சீசனில் இங்கு போக்குவரத்து நெரிசல் அதிகமாகவே இருக்கும்.  

இந்த நெடுஞ்சாலையின் சுற்றுவட்டாரத்தில் உள்ள வனப் பகுதியில் பல்லிகள், பாம்புகள், மலைப்பாம்புகள், அணில்கள், குரங்குகள் வசிக்கின்றன. ஊர்ந்து செல்லும் உயிரினங்கள் (reptiles) இந்த பாதையை  பயன்படுத்தும்போது பலமுறை வாகனங்களின் கீழ் நசுங்கி உயிரிழக்கின்றன.  

40 அடி உயரத்தில் 5 அடி அகலத்தில் கட்டப்பட்டுள்ள இந்த பாலம் நடுத்தர எடையுள்ள மூன்று மனிதர்களின் மொத்த எடையை எடுக்க எடையை தாங்க்க்கூடியது. இந்தப் பாலத்தை ஊர்ந்து செல்லும் உயிரினங்கள் மட்டுமல்ல, சிறுத்தைகள் கூட பயன்படுத்தப்படும் என்று நம்புவதாக வன அதிகாரிகள் கூறுகின்றனர்.

நான்கு கேமரா பொறிகளால் (camera traps) இந்த பாலம் கண்காணிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்று ராம்நகர் பிரதேச வன அலுவலர் (Ramnagar Divisional Forest Officer (DFO)) சந்திர சேகர் ஜோஷி தெரிவித்தார். இந்த ஆய்வுகளின் அடிப்படையில் பல்வேறு விஷயங்களை அறிந்துக் கொண்டு, உயிரினங்களின் பாதுகாப்புக்காக திட்டமிடலாம்.

சாலை ஒரு பரந்த `U` வடிவத்தில் வளைந்திருக்கும் இடத்தில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. மலையில் இருந்து கீழ்நோக்கி செல்லும் வாகனங்கள் பெரும்பாலும் அதிவேகத்தில் பயணிப்பதால், சாலையை கடக்க ஏதேனும் உயிரினங்கள் வந்தால் திடீரென பிரேக் போடுவதற்கான தேவையை குறைப்பதன் மூலம், இந்த பாலம் மனிதர்களுக்கும் பாதுகாப்பாக இருக்கும் என்று எதிர்பார்ப்பதாக வன அதிகாரி கூறுகிறார்.  

"இது ஒரு அடர்ந்த காடு, யானைகள், சிறுத்தைகள், மான்கள், காட்டெருமைகள் இந்த பகுதியில் வசிக்கின்றன. விலங்குகள் வனத்தில் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு நகர்கின்றன. வாகன ஓட்டுநர்கள் அவற்றை சிறிது தூரத்தில் இருந்து பார்க்கலாம் அல்லது மெதுவாக அல்லது நிறுத்தலாம், ஆனால் பாம்புகள், பல்லிகள், அல்லது அணில்கள் செல்லும்போது தொலைவில் இருந்து பார்க்க முடிவதில்லை" என்று ராம்நகர் பிரதேச வன அலுவலர் (Ramnagar Divisional Forest Officer (DFO)) சந்திர சேகர் ஜோஷி தெரிவித்தார்.

ஊர்ந்து செல்லும் உயிரினங்கள் மற்றும் பிற சிறிய விலங்குகள் பாலத்தை கடந்து செல்ல ஈர்க்க வேண்டும் என்பதற்காக, இலைகள் கொடிகளை அந்த பாலத்தின் மேல் படரவிடுவதாக சந்திர சேகர் ஜோஷி தெரிவித்தார்.  

ஊர்வன உட்பட வன விலங்குகளை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பலகைகள் வைக்கப்படுவதாகவும் அவர் கூறுகிறார். மிகவும் முக்கியமாக இந்த பாலத்தை சுற்றுலாப் பயணிகள் பாலத்தை (selfie) செல்ஃபி எடுக்க செல்லாமல் தடுப்பதற்க்க வன ஊழியர்கள் இப்பகுதியில் ரோந்து செல்வார்கள் என்றும் அவர் கூறினார்.

 

Labels:

Wednesday, December 2, 2020

மிதக்கும் ஆம்புலன்ஸ்: காஷ்மீரின் Dal lake-ல் வருகிறது முதல் ‘Boat Ambulance Service’

 


சாலைவழி ஆம்புலன்ஸ் சேவைகளைத் தவிர, இப்போது ஜம்மு-காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகரில் முதல் மிதக்கும் ஆம்புலன்ஸ் இயக்கப்படும். இதம் மூலம் ஆயிரக்கணக்கான மக்கள் பயனடைவார்கள்.

சுகாதார வசதிகளுடன் கூடிய இந்த ஆம்புலன்ஸ் சேவை விரைவில் ஜம்மு-காஷ்மீர் பள்ளத்தாக்கிலுள்ள தால் ஏரியில் செயல்படத் தொடங்கும்.

சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இரண்டு மாதங்களுக்கு முன்பு, ஹௌஸ்போட் அதாவது படகுவீடு வைத்திருக்கும் தாரிக் அகமது பட்லூ என்ற ஒருவருக்கு COVID-19 தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனைக்கு செல்ல வெண்டிய நிலை ஏற்பட்டபோது, இப்படிப்பட்ட மிதக்கும் ஆம்புலன்ஸ் பற்றிய ஒரு யோசனை அவருக்குத் தோன்றியது.

ஏ.என்.ஐ. பட்லூவுடன் பேசுகையில், “அந்த நேரத்தில் நான் கொரோனா வைரஸுக்கு (Corona Virus) ஆளானபோது, ​​மருத்துவமனையை அடைய எனக்கு ஒரு படகை வழங்கிய என் நண்பரைத் தவிர வேறு யாரும் எனக்கு உதவ முன்வரவில்லை. இது எனக்கு மிகவும் வேதனை அளித்தது. அப்போதுதான் படகுகளில் சிறப்பம்சம் வாய்ந்த மிதக்கும் ஆம்புலன்ஸ் தயாரிக்க முடிவு செய்தேன்.”

"தால் ஏரியின் அருகில் வசிக்கும் மக்கள் உடல்நலம் தொடர்பான பிரச்சினைகள் உட்பட டஜன் கணக்கான பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். அவசர நேரத்தில் அவர்களுக்கு சரியான சிகிச்சை கிடைப்பதில்லை. எனவே இந்த மிதக்கும் ஆம்புலன்ஸ் எதிர்காலத்தில் தால் ஏரி பகுதியில் வசிக்கும் மக்களின் உயிர் மற்றும் உடல் நலத்தை காப்பாற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கும்” என்றார்.

தால் ஏரிக்கு (Dal Lake) அருகில் வசிக்கும் மக்களின் நலனுக்காக இந்த சேவை வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார். “ஆம்புலன்ஸ் அவசர காலங்களில் மக்களுக்கு சரியான சுகாதார சேவைகளை வழங்கும். ஆக்ஸிஜன் சிலிண்டர், ஈ.சி.ஜி, ஆக்சிமீட்டர், சக்கர நாற்காலி மற்றும் ஸ்ட்ரெச்சர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் இதில் அளித்துள்ளோம். மேலும், இதில் ஒரு கட்டணமில்லா எண்ணையும் எழுதியுள்ளோம். இதன் மூலம் மக்கள் எங்களை எளிதில் தொடர்பு கொள்ள முடியும்” என்று அவர் மேலும் கூறினார்.

ஆம்புலன்ஸ் (Ambulance) படகின் மெக்கானிக் ரியாஸ் அஹ்மத், இந்த ஆம்புலன்ஸ் மரம் மற்றும் இரும்புத் தாள்களால் ஆனது என்றும், இதன் நீளம் 35 அடியாக இருக்கும், நடுவில் ஆறு அடி இடம் இருக்கும் அன்று ஏ.என்.ஐ.க்கு தெரிவித்தார்.

"நோயாளிகள் 3 முதல் 4 நிமிடங்களுக்கு முன் வந்திருந்தால், அவர்களது உயிரைக் காப்பாற்றியிருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறிய பல சம்பவங்கள் தால் ஏரி பகுதியில் நடந்துள்ளன. இந்த வசதி ஒரு மருத்துவமனையை அடையும் நேரத்தை மிச்சப்படுத்தும். இது சுற்றுலாப் பயணிகளுக்கும் உதவியாக இருக்கும். ஏனெனில் சுற்றுலாப் பருவத்தின் உச்சத்தில் உலகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் காஷ்மீர் பள்ளத்தாக்குக்கு வருகிறார்கள். அவர்கள் நோய்வாய்ப்பட்டால் அவர்களுக்கு சிகிச்சை தேவை. இப்போது இந்த வசதி மூலம் அவர்களுக்கு சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்க முடியும்” என்று மற்றொரு படகுவீடு வைத்திருக்கும் பிலால் அஹ்மத் கூறினார்.

 

Labels: ,