முதன்முறையாக.. பலூனில் பறந்து சென்று.. விலங்குகளை ரசிக்கும் வசதி
நாட்டிலேயே முதன்முறையாக மத்தியப் பிரதேசத்தின் உள்ள தேசிய பூங்காவில் வெப்பக்காற்று நிரம்பிய பலூனில் பறந்து சென்று வன விலங்குகளை கண்டுகளிக்கும் வசதி தொடங்கப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் உமரியா மாவட்டத்தில் 716 சதுரக் கிலோமீட்டர் பரப்பளவில் பாந்தவ்கர் தேசியப் பூங்கா உள்ளது. இங்கு, புலி, சிறுத்தை, மான் உள்ளிட்ட பல்வேறு விலங்கினங்களின் வாழ்விடமாக இந்தப் பூங்கா உள்ளது.
இந்நிலையில், இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக, வெப்பக்காற்று நிரம்பிய பலூனில் பறந்துசென்று பூங்காவின் இயற்கை எழிலையும், விலங்குகளையும் கண்டுகளிக்கும் வசதி தொடங்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே முதன்முறையாக விலங்குகள் சரணாலயத்தில் பறந்து கொண்டே விலங்குகளை ரசிக்கும் திட்டம் இங்கு தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Labels: Environment
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home