Sunday, February 28, 2021

மியான்மரில் ஓராண்டுக்கு நெருக்கடி நிலை அறிவிப்பு; ராணுவ ஆட்சி

 


தேர்தலில் நடந்த முறைகேடு காரணமாகவே ஆட்சி கவிழ்க்கப்பட்டுத் தங்கள் கட்டுப்பாடுக்குள் அரசு வந்துள்ளதாக மியான்மர் ராணுவம் தெரிவித்துள்ளது. இதனை மியான்மர் ராணுவக் கட்டுப்பாட்டில் இயங்கும் மியாவாடி செய்தி நிறுவனம் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சர்வதேச ஊடகங்கள் தரப்பில், “மியான்மர் அரசை திங்கட்கிழமையன்று அந்நாட்டு ராணுவம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. மேலும் அந்நாட்டின் தலைவர் ஆங் சான் சூச்சி கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் அடைக்கப்பட்டுள்ளார். தலைநகரிலிருந்து தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் அவசர நிலையையும் ராணுவம் அங்கு அமல்படுத்தியுள்ளது. ஒரு வருடத்திற்கு மியான்மர் ராணுவக் கட்டுப்பாட்டில் இருக்கும். சமீபத்தில் நடந்த தேர்தல் முறைகேடு காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த நவம்பரில் நடந்த தேர்தலில் ஆங் சான் சூச்சி தலைமையிலான ஜனநாயகக் கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியது. இத்தேர்தலை மியான்மர் ராணுவம் தொடர்ந்து விமர்சித்து வந்த நிலையில் தற்போது ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.

மியான்மர் ராணுவத்தின் இந்த நடவடிக்கையை அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் ஆகிய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும், சட்டத்தை மதித்து நடக்கும்படியும் தெரிவித்துள்ளன.

கடந்த 1962 முதல் 50 ஆண்டுகளுக்கும் மேலாக மியான்மரில் ராணுவ ஆட்சி நடைபெற்றது. இதை எதிர்த்து தேசிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஆங் சான் சூச்சி சுதந்திரப் போராட்டத்தை வழிநடத்தினார். சுமார் 21 ஆண்டுகள் அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.

மக்களின் போராட்டம் காரணமாக கடந்த 2015-ல் அங்கு பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதில் ஆங் சான் சூச்சியின் கட்சி அமோக வெற்றி பெற்றது. அவரின் மகன்கள் வெளிநாட்டுக் குடியுரிமை பெற்றிருப்பதால் அவரால் அதிபர் பதவியேற்க முடியவில்லை. இதைத் தொடர்ந்து சூச்சிக்கு நெருக்கமான டின் கியாவ் (71) அதிபர் பதவியேற்றார். நாட்டின் தலைமை ஆலோசகராக ஆங் சான் சூச்சி பொறுப்பேற்றார்.

ராக்கைன் மாநிலத்தில் ராணுவத் தளபதிகள் மேற்கொண்ட நடவடிக்கைகளால் 7.40 லட்சம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டனர். சூச்சிக்கு இருந்த ஜனநாயக பிம்பமானது இந்த நடவடிக்கைகளை அவர் வெளிப்படையாக ஆதரித்ததன் காரணமாக கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.

இந்த நிலையில் கரோனா தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 642 இடங்களுக்கு அந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூச்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கட்சி உள்பட 90-க்கும் மேற்பட்ட கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், ஆட்சி அமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதாக ஆங் சான் சூச்சியின் தேசிய ஜனநாயகக் கட்சி அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Labels:

செவ்வாய் கிரகத்தை அடைந்த ஹோப் விண்கலம்: ஐக்கிய அமீரகத்துக்குக் குவியும் பாராட்டு

 


ஐக்கிய அரபு அமீரகத்தின் ஹோப் விண்கலம் 7 மாத கால விண்வெளிப் பயணத்திற்குப் பிறகு செவ்வாய் கிரக சுற்றுவட்டப் பாதையை அடைந்தது.  உலகில் ஐந்தாவது நாடாக செவ்வாயில் தனது கால்தடத்தைப் பதித்திருக்கிறது. கிட்டத்தட்ட ஏழு மாதங்கள் விண்வெளியில் பயணித்த ஹோப்,  நேற்றிரவு 7.30 மணிக்கு செவ்வாயின் சுற்றுவட்டப் பாதையை அடைந்தது.

 

494 மில்லியன் கிமீ தூரம் பயணித்துள்ள ஹோப் மணிக்கு 39 ஆயிரத்து 600 கிமீ வேகத்தில் விண்ணில் செலுத்தப்பட்டது. மணிக்கு 1 லட்சத்து 26 ஆயிரம் கிமீ வேகத்தில் பயணித்துக் கொண்டிருந்த ஹோப் செவ்வாயை நெருங்கியதும் அதன் வேகம் 18 ஆயிரம் கிமீ ஆகக் குறைக்கப்பட்டது.
 
ஹோப் விண்கல திட்டம் 2014ஆம் ஆண்டு அமீரக அதிபர் ஷேக் கலீபா பின் சயீத் அல் நயானாலும், துணை அதிபர் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூமாலும் அறிவிக்கப்பட்டது. 2016ஆம் ஆண்டு இதன் தயாரிப்புப் பணிகளைத் துணை அதிபர் தொடங்கிவைத்தார். ஜப்பான் நாட்டிலுள்ள தானேகாஷிமா விண்வெளி மையத்திலிருந்து 2020ஆம் ஆண்டு ஜூலை 20ஆம் தேதி விண்ணில் MHI H2A என்ற ராக்கெட்டின் மூலம் ஏவப்பட்டது.
 
செவ்வாயை நெருங்கிக் கொண்டிருக்கும்போதே விண்வெளி கட்டுப்பாட்டு அறைக்குச் சென்றார் அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் முகமது சயீத். வெற்றிக்கரமாக சுற்றுவட்டப்பாதையை நெருங்கியவுடன் அவர், “நீங்கள்(ஆராய்ச்சியாளர்கள்) சாதித்துவிட்டீர்கள். இது உங்களுக்கும் தேசத்துக்கும் கிடைத்த மரியாதை. வாழ்த்துகள்” என்று உணர்வுப்பூர்வமாகப் பேசினார். இதைக் கேட்ட விஞ்ஞானிகள் கண்களில் கண்ணீர் ததும்ப ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து ஆரவாரம் செய்தனர். இந்தியா, அமெரிக்கா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் அமீரகத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளன. 
 
மூன்று ஆராய்ச்சிக் கருவிகளோடு செவ்வாய்க்குச் சென்றிருக்கும் ஹோப், செவ்வாய் கிரக வளிமண்டலத்தின் முழுமையானை புகைப்படத்தை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பருவகாலம் மற்றும் தினசரி ஏற்படும் மாற்றங்களை அறிந்துகொள்ளும் வகையில் வளிமண்டலத்தின் வெவ்வேறு பகுகிககளில் வெவ்வேறு தரவுகளைச் சேகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. 
 
இந்தத் தரவுகள் செவ்வாய் வளிமண்டலத்தின் வெவ்வேறு அடுக்குகளில் நிலவும் காலநிலை இயக்கவியல், வானிலை ஆகியவை குறித்த புரிதலை உலகிற்கு உணர்த்தும் என்கின்றனர். அதேபோல வளிமண்டலத்தில் ஆக்சிஜனும் ஹைட்ரஜனும் எவ்வாறு நகர்கின்றன, எவ்வாறு செவ்வாயிலிருந்து வெளியேறுகின்றன உள்ளிட்டைவை குறித்தும் ஹோப் கண்டுப்பிடிக்கும் என ஹோப்புடன் இருக்கிறார்கள் அமீரக விஞ்ஞானிகள்! 

Labels: ,

Saturday, February 27, 2021

ஆப்கானிஸ்தானில் இந்தியா புதிய அணை கட்டுகிறது

 காபூல் ஆற்றின் குறுக்கே லாலந்தர் (ஷாதூட்) என்ற புதிய அணையை கட்டித்தர பிரதமர் மோடி, ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி ஆகியோர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

 

 


 

 அண்டை நாடான ஆப்கானிஸ்தானில் இந்தியா இதுவரை 400-க்கு மேற்பட்ட வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றி முடித்துள்ளது. சல்மா என்ற அணையை ஏற்கனவே கட்டிக் கொடுத்துள்ளது.

இந்தநிலையில், காபூல் ஆற்றின் குறுக்கே லாலந்தர் (ஷாதூட்) என்ற புதிய அணையை கட்டித்தர உள்ளது. இந்த அணை, காபூல் நகரில் சுமார் 20 லட்சம் வீடுகளுக்கு சுத்தமான குடிநீர் வழங்கவும், சுற்று வட்டார பகுதிகளின் நீர்ப்பாசன தேவைக்கும் பயன்படும் என்று தொிகிறது.

இந்த அணையை கட்டி தருவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சி, நேற்று காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. பிரதமர் மோடி, ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி ஆகியோர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. மோடிக்கு அஷ்ரப் கனி நன்றி தெரிவித்தார்.

நிகழ்ச்சியில், பிரதமர் மோடி பேசுகையில், ‘‘ஆப்கானிஸ்தானின் வளர்ச்சியையும், இந்தியா-ஆப்கானிஸ்தான் நட்புறவையும் எந்த அன்னிய சக்தியாலும் தடுக்க முடியாது. ஆப்கானிஸ்தானில் வன்முறை அதிகரிப்பது கவலை அளிக்கிறது. அங்கு போர் நிறுத்தம் ஏற்படுவதை ஆதரிக்கிறோம்’’ என்றார். 

Labels: ,

உலகின் முதல் Energy Island : டென்மார்க்

 


 

 

ஐரோப்பாவின் மின் தேவையை பூர்த்திசெய்ய டென்மார் அரசு செயற்கையான தீவு ஒன்றை உருவாக்க முடிவெடுத்துள்ளது.

இந்த ஆற்றல்  தீவானது 30 லட்ச மக்களின் மின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் பசுமை ஆற்றலை உருவாக்கி சேமித்து வைக்கும் திறன் கொண்டிருகும்

Labels: ,

Tuesday, February 23, 2021

இந்திய-அமெரிக்க ராணுவங்கள் ராஜஸ்தானில் கூட்டு ராணுவ பயிற்சி

 


இந்தியா மற்றும் அமெரிக்காவின் ராணுவங்கள் இணைந்து அடிக்கடி போர் பயிற்சிகளை நடத்தி வருகின்றன. அந்த வகையில் 16-வது கூட்டு ராணுவ பயிற்சி ராஜஸ்தானின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள மகாஜன் களத்தில் நேற்று தொடங்கியது.

வருகிற 21-ந் தேதி வரை நடைபெறும் இந்த பயிற்சியில் இருநாட்டு ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். மேலும் இரு நாடுகளின் ஹெலிகாப்டர்கள், போர் தளவாடங்கள் என பெரும் ஆயுதங்களும் இந்த பயிற்சியில் பயன்படுத்தப்படுகின்றன.


இந்த பயிற்சியின்போது, இருதரப்பு உத்திகள், கருத்துகள், சிறந்த பயிற்சிகள் இருநாட்டு வீரர்களுக்கு இடையே பகிரப்படும். குறிப்பாக பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளில் இரு நாட்டு ராணுவங்களின் பரந்த அனுபவங்கள் பரிமாறிக்கொள்ளப்படும். மேலும் மனிதாபிமான உதவிகள், பேரிடர் நிவாரண நடவடிக்கைகள் குறித்த அனுபவங்களும் இரு தரப்பும் பரிமாறிக்கொள்வார்கள்.

இந்த பயிற்சிக்காக வந்துள்ள அமெரிக்க ராணுவ வீரர்களை இந்திய ராணுவத்தின் 170-வது படைப்பிரிவு பிரிகேடியர் முகேஷ் பன்வாலா வரவேற்றார்.

முன்னதாக பிரெஞ்சு ராணுவத்துடன் கடந்த மாதத்தில் 5 நாட்கள் இந்திய வீரர்கள் பயிற்சி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Labels: ,

Wednesday, January 20, 2021

அமெரிக்காவில் முதல் பெண் நிதியமைச்சராக ஜேனட் ஏலன் நியமனம்

 


அமெரிக்க வரலாற்றிலேயே முதல் முறையாக பெண் ஒருவர் நிதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்க ஃபெடரல் வங்கியின் முன்னாள் தலைவர் ஜேனட் ஏலன் (வயது 74) நிதியமைச்சராக நியமிக்க அமெரிக்க செனட் ஒப்புதல் அளித்தது.

அமெரிக்க நிதியமைச்சராக ஜேனட் ஏலனை நியமிப்பது தொடர்பாக செனட் அவையில் நேற்று நடந்த வாக்கெடுப்பில் ஆதரவாக 84 உறுப்பினர்களும், எதிராக 15 உறுப்பினர்களும் வாக்களித்தனர். இதில் செனட் அவையில் தலைவராக இருக்கும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் நடத்திய வாக்கெடுப்பில் ஜேனட் ஏலன் நிதியமைச்சராக ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அமெரிக்க நிதியமைச்சராகப் பொருளாதார வல்லுநர் ஜேனட் ஏலன் முறைப்படி விரைவில் பதவி ஏற்பார். அதிபர் ஜோ பைடன் நிர்வாகத்தில் கேபினட் அமைச்சராக ஏலன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதற்கு முன் தேசிய உளவுத்துறை இயக்குநராக அவ்ரில் ஹையின்ஸும், பாதுகாப்புத் துறை அமைச்சராக லாய்ட் ஆஸ்டினும் நியமிக்கப்பட்டனர். உள்துறை அமைச்சராக டோனி பில்கின் விரைவில் தேர்ந்தெடுக்கப்படுவார் எனத் தெரிகிறது.

உலகின் சிறந்த பொருளாதார வல்லுநர்களில் ஒருவராகக் கருதப்படும் ஜேனட் ஏலன். பிரவுன் மற்றும் யேழ் பல்கலைக்கழகத்தில் படித்தவர். பல்வேறு புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் சிறப்புப் பேராசிரியராகப் பாடம் நடத்தியுள்ளார். அமெரிக்க ஃபெடரல் வங்கியின் தலைவராக இருந்தபோது, இவரின் திறமை அறியப்பட்டது. அமெரிக்காவில் வேலையின்மை, பொருளாதாரச் சிக்கல் நிலவியபோது, இவரின் கொள்கைகள், திட்டங்கள் அவற்றிலிருந்து மீண்டுவர உதவின.

அமெரிக்க செனட் சபையில் நேற்று நடந்த வாக்கெடுப்பின்போது, ஜேனட் ஏலன் நிதியமைச்சராக நியமிக்கப்பட உள்ளதாக துணை அதிபர் கமலா ஹாரிஸ் முன்மொழிந்ததும் அதைக் குடியரசுக் கட்சியினரும் வரவேற்றனர்.

அமெரிக்கப் பொருளாதாரம் மேலும் சிறப்படைய ஜேனட் ஏலனின் வழிகாட்டுதல்கள், நிதிக்கொள்கைகள் மீது தங்களுக்கு நம்பிக்கையிருக்கிறது என்று அவர்கள் தெரிவித்தார்கள்.

அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் நிர்வாகக் குழுவில் 1994 முதல் 1997ம் ஆண்டுவரை ஜேனட் ஏலன் பதவி வகித்துள்ளார். அமெரிக்க அதிபராக கிளிண்டன் இருந்தபோது, அவரின் பொருளாதார ஆலோசகராக ஜேனட் ஏலன் பதவி வகித்துள்ளார்.

2004 முதல் 2010-ம் ஆண்டுவரை சான்பிரான்சிஸ்கோ ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் தலைவராக ஜேனட் ஏலன் இருந்தார். 2014 முதல் 2018-ம் ஆண்டுவரை அமெரிக்க ஃபெடரல் வங்கியின் தலைவராக ஜேனட் ஏலன் இருந்தார். ட்ரம்ப் ஆட்சியில் ஜேனட் ஏலனுக்குப் பதவி நீட்டிப்பு வழங்கப்படவில்லை.

 

Labels: ,

Sunday, January 10, 2021

மணிக்கு 620 கிமீ வேகத்தில் பயணிக்கும் அதிவேக மிதக்கும் ரயில் சீனாவில் அறிமுகம்

 


சீனாவில் அடுத்தகட்ட சாதனை யாக அதிவேக மிதக்கும் ரயிலை அறிமுகம் செய்துள்ளனர். காந்த இயக்கவியல் அடிப்படையில் இயங்கும் இந்த ரயில் மணிக்கு 620 கிமீ வேகத்தில் பயணிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் தென்மேற்கு ஜியோ தாங் பல்கலைக்கழக ஆராய்ச்சி யாளர்கள் இந்த ரயிலை வடி வமைத்துள்ளனர்.

உயர் வெப்ப சூப்பர்கண்டக்டிங் தொழில்நுட்பத்தின் மூலம் இந்த ரயில் தாண்டவாளங்களில் தொட்டுச்செல்லாமல் மிதந்தபடி அதிவேகமாகப் பயணிக்கக் கூடியது. இந்த ரயிலில் சக்கரங்கள் இல்லாததால் உராய்வு மிகவும் குறைவாகவே இருக்கும். காந்தமயப்படுத்தப்பட்ட தாண்ட வாளத்தின் மீது இந்த ரயில் காற்றில் மிதந்தபடி வேகமாகப் பயணிக்கும்.

தற்போது இதன் 69 அடி நீள மாதிரியை அறிமுகப்படுத்தி உள்ள ஆராய்ச்சியாளர்கள், அடுத்த மூன்று முதல் 10 ஆண்டுகளுக்குள் இது முழு செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படும் எனக் கூறியுள்ளார்கள். இந்த ரயில் மணிக்கு 620 கிமீ வேகத்தில் பயணிக்கக் கூடியது. இதன் மூலம் பயணித்தால் லண்டனிலிருந்து பாரீஸுக்கு 47 நிமிடங்களில் போய்விடலாம்.

இந்நிலையில் மேலும் இந்த ரயிலை மணிக்கு 800 கிமீ வேகத்தில் பயணிக்கும் வகையில் உருவாக்கும் முயற் சிகளையும் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டுவருவதாகக் கூறி னார்கள்.சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள மிதக்கும் ரயில்.

Labels: ,

Friday, January 8, 2021

வெளிநாடுகளில் வாழ்பவர்கள் பட்டியலில் இந்தியர்கள் முதலிடம்

 


வெளிநாடுகளில் வாழ்பவர்கள் பட்டியலில் இந்தியர்கள் முதலிடத்தில் உள்ளனர். மொத்தம் ஒரு கோடியே 80 லட்சம் பேர் வெளிநாடுகளில் வசிப்பதாக ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட சமீபத்திய கணக்கீடு தெரிவிக்கிறது.

ஒரு நாட்டில் பிறந்து வெளிநாடுகளில் வாழ்பவர்கள் பட்டியலில் மெக்ஸிகோ, ரஷ்யா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளனர். இந்நாடுகளில் பிறந்த ஒருகோடியே 10 லட்சம் பேர் வெளிநாடுகளில் குடிபெயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வரிசையில் சீனாவில் பிறந்து வெளிநாடுகளுக்கு புலம் பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியாகும். சிரியாவிலிருந்து புலம் பெயர்ந்தவர்கள் எண்ணிக்கை 80 லட்சமாக உள்ளது.

வெளிநாடுகளில் புலம் பெயர்ந்தவர்கள் 2020 பட்டியலை ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார சமூக விவகாரத் துறை வெளியிட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் (யுஏஇ) 35 லட்சம் இந்தியர்களும், அமெரிக்காவில் 27 லட்சம் இந்தியர்களும், சவுதி அரேபியாவில் 25 லட்சம் இந்தியர்களும் வாழ்கின்றனர். தவிர ஆஸ்திரேலியா, கனடா, குவைத், ஓமன், பாகிஸ்தான், கத்தார், இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கும் இந்தியர்கள் புலம் பெயர்ந்துள்ளதாக அந்த பட்டியல் தெரிவிக்கிறது.

கடந்த 2000-வது ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் அனைத்து நாடுகளுக்கும் மக்கள் புலம் பெயர்வது அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. இந்த 20 ஆண்டுகளில் மட்டும் ஒரு கோடி இந்தியர்கள் புலம்பெயர்ந்துள்ளனர். இந்தியாவுக்கு அடுத்தபடியாக சிரியா,வெனிசுலா, சீனா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களும் புலம் பெயர்ந்துள்ளனர்.

அமெரிக்கா மீது ஆர்வம்

உலக நாடுகளில் பெரும்பாலானோரை ஈர்க்கும் நாடாக அமெரிக்கா திகழ்கிறது. 2020-ம் ஆண்டில் 5 கோடியே 10 லட்சம் பேர் அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்துள்ளனர். இது மொத்தமாக புலம் பெயர்ந்தவர்கள் எண்ணிக்கையில் 18 சதவீதமாகும்.

Labels:

Sunday, January 3, 2021

அணுசக்தி நிலையங்களின் பட்டியல்: இந்தியா - பாகிஸ்தான் பரிமாற்றம்


 

ஒரு நாடு மற்றொரு நாட்டில் அமைந்துள்ள அணுசக்தி நிலையங்களை தாக்கக் கூடாது என்பதை உறுதிப்படுத்த இந்தியா  பாகிஸ்தான் இடையே கடந்த 1988-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, தங்கள் நாடுகளில் இருக்கும் அணுசக்தி நிலையங் கள் தொடர்பான விவரங்களை இந்தியாவும் - பாகிஸ்தானும் ஆண்டுதோறும் பரிமாறிக் கொள்ள வேண்டும். இந்த நடைமுறையானது 1992-ம் ஆண்டுஜனவரி 1 முதல் பின்பற்றப்பட்டு வருகிறது.

அந்த வகையில், இந்தியாவும் பாகிஸ்தானும் தத்தம் நாடுகளில் உள்ள அணுசக்தி நிலையங்கள் குறித்த தகவல்களை நேற்று பரஸ்பரம் பரிமாறிக் கொண்டன. டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரியிடம் மத்தியவெளியவுறவுத் துறை அமைச்சகமும், இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரியிடம் பாகிஸ்தான் வெளியுறவுத் துறைஅமைச்சகமும் இந்தப் பட்டியல்களை ஒப்படைத்தன.

Labels: ,

Tuesday, December 8, 2020

55 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா- வங்க தேசம் இடையிலான ரயில் சேவை தொடக்கம்...!!


 

பிரதமர் நரேந்திர மோடி, வங்காளதேச நாட்டின் பிரதமர் ஷேக் ஹசினா ஆகியோருக்கு இடையிலான உச்சி மாநாடு  இன்று நடைபெற்றது. இருதரப்பு உறவுகள், குறிப்பாக கொரோனாவுக்கு  பிந்தைய காலத்தில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடர்பான அனைத்து அம்சங்கள் குறித்தும் இரண்டு தலைவர்களும் மாநாட்டில் விரிவாக விவாதித்தனர். 

இந்த மாநாட்டின் போது, பிரதமர் நரேந்திர மோடியும் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவும் இணைந்து, இன்று ஹல்திபரி-சிலாஹதி ரயில் பாதையை தொடங்கி வைத்தனர். 55 ஆண்டுகளுக்கு பிறகு  இந்த ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. ஹால்திபரி, வடகிழக்கு ரயில்வேயின் கதிஹார் கோட்டத்தில் உள்ள முக்கியமான ரயில்நிலையம் ஆகும்.

மாநாட்டில் வங்காள தேச பிரதமர் ஷேக் ஹசீனா கூறும் போது வங்காள தேசம் , தனது 50வது சுதந்திர தினத்தை கொண்டாட உள்ள நிலையில்,  அதற்கு சிறப்பு சேர்க்கும் வகையில், மார்ச் 26, 2021 அன்று பிரதமர் மோடி டாக்கா வருகை  தர வேண்டும் என கோரினார். 1971 ஆம் ஆண்டின்  வங்க தேசத்தின் விடுதலைப் போரின் கூட்டு நினைவேந்தலின் மகுடமாக இருக்கும் என கூறி உள்ளார்.

2020 மார்ச்சில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க முஜிப் பார்ஷோ–வின் போது பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி செய்தி ஒன்றை அனுப்பினார். பங்களாதேஷ் 2020 ஆம் ஆண்டை முஜிப் போர்ஷோ - பங்களாதேஷ் தேச தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மான் பிறந்த நூற்றாண்டு - என கொண்டாடியது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் இரண்டு தலைவர்களும் தொடர்ந்து, தொடர்பில் இருந்தனர்.

பிரதமர் நரேந்திர மோடி, உரையாடலின் போது, “ அண்டை நாடுகளுக்கு முக்கியட்ய்ஹ்துவம் தரும் இந்தியாவின் கொள்கையை பொறுத்தவரை, வங்கதேசம் தூணாக விளங்குகிறது என தெரிவித்தார்.  “பங்களாதேஷுடனான இந்தியாவின் உறவை வலுப்படுத்த முதல் நாளிலிருந்து முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. தொற்றுநோய் காரணமாக, இந்த ஆண்டு சவாலான ஆண்டாக உள்ளது, ஆனால் சவாலான கால கட்டத்திலும், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மேலும் வலுப்பட்டு ஒத்துச்ழைப்பு அதிகரித்துள்ளது”என்று பிரதமர் மோடி பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவுடன் மெய்நிகர் உச்சி மாநாட்டில் தெரிவித்தார்.

 

Labels: ,