அணுசக்தி நிலையங்களின் பட்டியல்: இந்தியா - பாகிஸ்தான் பரிமாற்றம்
ஒரு நாடு மற்றொரு நாட்டில் அமைந்துள்ள அணுசக்தி நிலையங்களை தாக்கக் கூடாது என்பதை உறுதிப்படுத்த இந்தியா – பாகிஸ்தான் இடையே கடந்த 1988-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, தங்கள் நாடுகளில் இருக்கும் அணுசக்தி நிலையங் கள் தொடர்பான விவரங்களை இந்தியாவும் - பாகிஸ்தானும் ஆண்டுதோறும் பரிமாறிக் கொள்ள வேண்டும். இந்த நடைமுறையானது 1992-ம் ஆண்டுஜனவரி 1 முதல் பின்பற்றப்பட்டு வருகிறது.
அந்த வகையில், இந்தியாவும் பாகிஸ்தானும் தத்தம் நாடுகளில் உள்ள அணுசக்தி நிலையங்கள் குறித்த தகவல்களை நேற்று பரஸ்பரம் பரிமாறிக் கொண்டன. டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரியிடம் மத்தியவெளியவுறவுத் துறை அமைச்சகமும், இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரியிடம் பாகிஸ்தான் வெளியுறவுத் துறைஅமைச்சகமும் இந்தப் பட்டியல்களை ஒப்படைத்தன.
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home