Tuesday, February 23, 2021

முஷ்டாக் அலி டி20: கோப்பை வென்றது தமிழ்நாடு அணி!

 



சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் தமிழ்நாடு அணி கோப்பை வென்று அசத்தியுள்ளது


மொத்தம் 38 அணிகள் பங்கேற்ற இந்தியாவின் மிகப்பெரிய டி20 கிரிக்கெட் தொடரான சையத் முஷ்டாக் அலி டி20 கோப்பை தொடர் ஜனவரி 10ஆம் தேதி துவங்கி, ஜனவரி 31ஆம் தேதி நிறைவடைந்தது. இறுதிப் போட்டியில் தமிழ்நாடு, பரோடா அணிகள் பலப்பரீட்சை நடத்திய நிலையில் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் தமிழ்நாடு அணி வெற்றிபெற்று அசத்தியுள்ளது.

உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடரான சையது முஸ்தாக் அலி டிராஃபியின் இறுதி போட்டியில் தமிழ்நாடு - பரோடா அணிகள் மோதின. அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதை தொடர்ந்து களமிறங்கிய பரோடா அணி தமிழ்நாடு அணியின் மிரட்டலான பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்களை வீழ்த்தி தடுமாறியது. பரோடா அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 120 ரன்கள் மட்டுமே எடுத்தது. தமிழ்நாடு அணி சார்பில் மணிமாறன் சித்தார்த் சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்களை வீழ்த்தினார்.


இதையடுத்து 121 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய தமிழ்நாடு அணி 18 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து இலக்கை எட்டி கோப்பையை வென்றது. இறுதிப் போட்டியில் தமிழ்நாடு அணி வெற்றி முக்கிய வீரராக இருந்த மணிமாறன் ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.

Labels: ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home