Tuesday, February 23, 2021

உ.பி.-யின் ராமர் கோயில் அலங்கார ஊர்திக்கு முதல் பரிசு!

 

குடியரசு தின அணிவகுப்பில் உத்தர பிரதேசத்தின் ராமர் கோயில் அலங்கார ஊர்திக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது.

டெல்லியில் இந்தாண்டு நடைப்பெற்ற குடியரசு தினவிழா அணிவகுப்பில் கலந்து கொண்டவர்களுக்கான விருதுகள் மற்றும் பரிசுகளை மத்திய இளைஞர் விவகாரம் மற்றும்
விளையாட்டுத்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜூ இன்று வழங்கினார்.

டெல்லியில் நடைப்பெற்ற குடியரசு தினவிழா அணிவகுப்பில், 32 அலங்கார ஊர்திகள் இடம் பெற்றன. அதில் 17 அலங்கார ஊர்திகள், மாநிலங்கள் மற்றும் யூனியன்
பிரதேசங்களைச் சேர்ந்தவை. 9 அலங்கார ஊர்திகள் பலதுறை அமைச்சகங்கள் மற்றும் துணை ராணுவப்படையைச் சேர்ந்தவை. 5 ஊர்திகள் பாதுகாப்பு படைகளைச்
சேர்ந்தவை. இந்த அலங்கார ஊர்திகள், நாட்டின் கலாச்சாரம், பொருளாதார வளர்ச்சி, ராணுவத்தின் வலிமை ஆகியவற்றை வெளிப்படுத்தின.

அயோத்தி கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் வகையில், புதிதாக கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலின் மாதிரி வடிவமைப்பைக்கொண்ட, உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த
அலங்கார ஊர்தி, சிறந்த அலங்கார ஊர்தியாக தேர்வு செய்யப்பட்டு முதல் பரிசை வென்றது. இரண்டாவது இடத்தை திரிபுரா அலங்கார ஊர்தி பிடித்தது. இது தற்சார்பு
இந்தியா இலக்கை அடைய சுற்றுச்சூழலுக்கு ஏற்ற மூங்கில் மற்றும் பிரம்பு தயாரிப்பு பொருட்கள் மற்றும் திரிபுரா கலாசாரத்தை வெளிப்படுத்தின.

சிறந்த கலை நிகழ்ச்சிகளுக்கான விருதை டெல்லி மவுன்ட் அபு பள்ளி மற்றும் வித்ய பாரதி பள்ளி மாணவர்களுக்கு கிரண் ரிஜிஜூ வழங்கினார். இந்த குழந்தைகள்,
தற்சார்பு இந்தியாவுக்கான தொலைநோக்கை வெளிப்படுத்தினர்.

Labels: , ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home