Tuesday, February 23, 2021

இந்தியாவின் முதல் இடியுடன் கூடிய மாழை ஆராய்ச்சிக்கான சோதனை தளம்: பாலசூர்,ஒடிஸா




ஒடிஸாவின் பாலசூர் பகுதியில் இந்தியாவின் முதல்  இடியுடன் கூடிய மாழை தொடர்பான ஆராய்ச்சியை மேற்கொள்ள சோதனை படுகையை இந்திய Metrological நிறுவனம் (IMD) அமைக்கவுள்ளது.

இது IMD , புவி அறுவியல் அமைச்சகம், பதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO) மற்றும் இஸ்ரோ ஆகிவற்றின் கூட்டு முயற்சி ஆகும்.

Thunderstrom Reserch Testbed - கான மேம்பட்ட கண்காணிப்பு அமைப்புகளை வட ஒடிஸா, மேற்கு வங்கம், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் நிறுவபடவுள்ளது.

Labels: ,

தனியார் ராக்கெட் தயாரிப்பு நிறுவனம் -Skyroot Aerospace




ஹைத்தரபாத்தை சார்ந்த Skyroot Aerospace எனும் தனியார்  நிறுவனம் சிறிய செயற்கைக்கோள் ஏவுதல் வாகனம் தயாரிக்க இஸ்ரோவுடன் ஒப்பந்தம் மேற்க்கொண்டுள்ளது.

இந்த ஒப்பந்தம் மூலம் இஸ்ரோவிடம் உள்ள தொழில்நுட்ப வசதிகளைSkyroot Aerospace நிறுவனம் பயன்படுத்த வகை செய்யப்பட்டும்.

Skyroot Aerospace தற்போது உருவாக்கிவரும் விக்ரம்-1 ராக்கெட்டின் உருவாக்கத்தை விரைவுபடுத்தும்.

விக்ரம்-1 மூலம் சிறிய செயற்க்கைக்கோளை விண்ணில் செலுத்த இயலும்.

இஸ்ரோவுடன் ராக்கெட் தயாரிப்பில் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள முதல் நிறுவனம் Agnikul Cosmos Pvt Ltd.


ஸ்கைரூட் நிறுவனம்:

நாகபாரத் தக்கா மற்றும் பவன்குமார் சந்தனா ஆகிய இருவரும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் ராக்கெட் வடிவமைப்பு பொறியாளர்களாக பணியாற்றியுள்ளனர். பின்னர், அந்த வேலையிலிருந்து விலகி 2018ம் ஆண்டு சொந்தமாக ராக்கெட் தயாரிக்கும் ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தை துவக்கினர். விண்வெளி சார்ந்த பணிகளில் ஜனநாயகத்தை அதிகரிக்கும் நோக்கில் குறைந்த விலையிலும், நம்பகத்தன்மையுடனும் ஏவுகணைகளை தயாரிப்பதே ஸ்கைரூட்டின் லட்சியம்.

இதுவே இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் தயாரிப்பு நிறுவனம். உள்நாட்டிலேயே ராக்கெட்டுகளை உருவாக்குவதற்கான திறனுடன் ஸ்கைரூட் இயங்கி வருவதாக இதன் நிர்வாகிகள் கூறுகின்றனர்.

ஏவுகணைக்கான பொருட்கள் முழுவதும் உள்நாட்டிலேயே உருவாக்கப்படுகிறது. இந்தியாவில் உள்ள கைதேர்ந்த பொறியாளர்களை வைத்து சிறந்த முறையில் தயாரிக்கப்படுகிறது.


ஏவுகணைகளை இயக்குவதற்கான வழிகாட்டுதல்கள், கட்டுப்பாட்டு செயல்பாடுகள் உள்ளிட்டவைகளுக்கான மென்பொருளையும் ஸ்கைரூட் நிறுவனம் உருவாக்கியுள்ளது. 2021ம் ஆண்டின் இறுதியில் தனது முதல் ஏவுகணை குறித்த அறிமுகத்தை வெளியிடுவதற்காக ஸ்கைரூட் நிறுவனம் முனைப்புடன் இயங்கி வருகிறது.

உள்நாட்டில் ராக்கெட் தயாரிக்கும் முதல் தனியார் நிறுவனம் ஸ்கைரூட். ஓராண்டிற்குள் இதற்கான பரிசோதனை பணிகள் வெற்றிகரமாக நடைபெறும். எங்களுக்கும், நாட்டிற்கும் மைல்கல்லாக அமையும்.

விண்வெளி சார்ந்த பணிகளில் தனியாரின் பங்களிப்பிற்கு அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், ஸ்கைரூட் நிறுவனம் விண்ணை முட்டுவதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறது.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Labels: , ,

Thursday, December 24, 2020

ISRO தலைவர் சிவனின் பதவிக்காலத்தை நீட்டித்துள்ளது மத்திய அரசு..!!

தமிழகத்தை சேர்ந்த கே.சிவன், (K.Sivan) இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ (ISRO) நிறுவனத்தில் விஞ்ஞானியாக 1982ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார். இஸ்ரோவில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்து வந்த இவர், பிஎஸ்எல்வி (PSLV) ராக்கெட் செலுத்துவதில் முக்கியப் பணி ஆற்றினார். இந்தியாவிலிருந்து கடந்த 33 ஆண்டுகளாக ஏவப்பட்ட செயற்கைக் கோள்களில் கே.சிவனின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாகும். 

 கடந்த 2018ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் தலைவராக கே.சிவன் நியமிக்கப்பட்டார். அவரது பதவிக்காலம் வருகிற ஜனவரி மாதம் 14ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. 

இந்த நிலையில், இஸ்ரோ தலைவர் சிவனின் பதவிக்காலத்தை மேலும் ஓராண்டிற்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவின் படி, அவர் 2022 ஜனவரி 14ஆம் தேதி வரை அவர் பதவியில் நீடிப்பார். 

தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த கே.சிவன், இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி, விண்வெளி திட்டங்களில் முக்கிய பங்காற்றியுள்ளார். இந்தியாவின் சாதனை திட்டமான மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டப்பணியில், கே.சிவன் தலைமையிலான இஸ்ரோ விஞ்ஞானிகள் குழு தீவிரமாக பணியாற்றி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்தியாவின் வரலாற்று சிறப்புமிக்க சந்திராயன் 2 விண்கலத்தை விண்ணில் ஏவியது உட்பட விண்வெளி துறையில் பல்வேறு சாதனைகளை படைத்து வரும் இஸ்ரோ தலைவர் கே.சிவன், சர்வதேச அளவில் பல்வேறு விருதுகளை வென்றுள்ளார்.

Labels: , ,

Wednesday, December 9, 2020

CMS-01 செயற்கைக்கோளை சுமந்தபடி விண்ணில் சீறிப்பாய்ந்தது PSLV-C50..!!!

 


ஸ்ரீஹரிகோட்டா: ஆந்திர பிரதேசத்தில், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து பி எஸ் எல் வி ராக்கெட்  இன்று பிற்பகல் திட்டமிட்ட நேரத்தில் விண்ணில் சீறிப்பாய்ந்தது.  இது இந்திய விண்வெளி வரலாற்றில் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (ISRO) , 1,410 கிலோ எடை கொண்ட சி.எம்.எஸ்.-01 (CMS-01) என்ற தொலைத்தொடர்பு செயற்கைக்கோளை வடிவமைத்து உள்ளது.  ஆந்திர பிரதேசத்தில், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து பி எஸ் எல் வி ராக்கெட்  இன்று பிற்பகல் திட்டமிட்ட நேரத்தில் தொலைத் தொடர்பு செயற்கைக்கோள், இன்று மாலை விண்ணில் ஏவப்பட்டது. இந்த செய்ற்கைக்கோள் இந்தியாவின் 42வது தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் ஆகும்.

இந்த செயற்கைக்கோள், அந்தமான் மற்றும் நிகோபர், லட்சத்தீவுகள்  உட்பட இந்திய பகுதிகளில் நீட்டிக்கப்பட்ட-சி பேண்ட் சேவைகளை வழங்கும் நோக்கில் இந்த செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டு உள்ளது.மேலும் கல்வி, மருத்துவம், பேரிடர் மேலாண்மை, ஆகிய பணிகளுக்குத் தேவையான தரவுகளை பெறுவதற்காகவும் இந்த செயற்கைக்கோள் அனுப்பப்பட்டுள்ளது.

பி.எஸ்.எல்.வி. சி-50 ராக்கெட்  (PSLV C-50) 44.4 மீட்டர் உயரம் கொண்டது. இதில் முதல் நிலையில் திட எரிபொருளும், 2-ம் நிலையில் திரவ எரிபொருளும் நிரப்பப்பட்டு உள்ளன. இது இந்தியாவின் 52-வது பி.எஸ்.எல்.வி. ராக்கெட் ஆகும். இதனை விண்ணில் செலுத்துவதற்கான 25 மணிநேர கவுண்ட்டவுன் நேற்று பகல் 2.41 மணிக்கு தொடங்கியது. அப்போதில் இருந்து ராக்கெட் மற்றும் செயற்கைக்கோளின் செயல்பாடுகளை விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இன்று மாலை 3.41 மணிக்கு ராக்கெட் விண்ணில் சீறிப்பாய்ந்தது.  

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ (ISRO) தலைவர் சிவன், "தனியார் துறையின் பங்களிப்புடன் தொடங்கப்படும் முற்றிலும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டு வரும் புதிய செயற்கைக்கோளான ஆனந்த் விரைவில் விண்ணில் செலுத்தப்படவுள்ளது. ஸ்பேஸ்கிட்ஸ் இந்தியா, சதீஷ்சாட், யூனிட்டிசாட் ஆகியவையும் அடுத்தடுத்து விண்ணில் செலுத்தப்படவுள்ளது" என்று தெரிவித்தார்.

சந்திரயான் 3, ஆதிகேசவன், ககன்யான் போன்ற செயற்கைக்கோள் திட்டப்பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வருவதாகவும் இஸ்ரோ தலைவர் கூறினார்.

 

Labels: ,