தனியார் ராக்கெட் தயாரிப்பு நிறுவனம் -Skyroot Aerospace
ஹைத்தரபாத்தை சார்ந்த Skyroot Aerospace எனும் தனியார் நிறுவனம் சிறிய செயற்கைக்கோள் ஏவுதல் வாகனம் தயாரிக்க இஸ்ரோவுடன் ஒப்பந்தம் மேற்க்கொண்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் மூலம் இஸ்ரோவிடம் உள்ள தொழில்நுட்ப வசதிகளைSkyroot Aerospace நிறுவனம் பயன்படுத்த வகை செய்யப்பட்டும்.
Skyroot Aerospace தற்போது உருவாக்கிவரும் விக்ரம்-1 ராக்கெட்டின் உருவாக்கத்தை விரைவுபடுத்தும்.
விக்ரம்-1 மூலம் சிறிய செயற்க்கைக்கோளை விண்ணில் செலுத்த இயலும்.
இஸ்ரோவுடன் ராக்கெட் தயாரிப்பில் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள முதல் நிறுவனம் Agnikul Cosmos Pvt Ltd.
ஸ்கைரூட் நிறுவனம்:
நாகபாரத் தக்கா மற்றும் பவன்குமார் சந்தனா ஆகிய இருவரும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் ராக்கெட் வடிவமைப்பு பொறியாளர்களாக பணியாற்றியுள்ளனர். பின்னர், அந்த வேலையிலிருந்து விலகி 2018ம் ஆண்டு சொந்தமாக ராக்கெட் தயாரிக்கும் ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தை துவக்கினர். விண்வெளி சார்ந்த பணிகளில் ஜனநாயகத்தை அதிகரிக்கும் நோக்கில் குறைந்த விலையிலும், நம்பகத்தன்மையுடனும் ஏவுகணைகளை தயாரிப்பதே ஸ்கைரூட்டின் லட்சியம்.
இதுவே இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் தயாரிப்பு நிறுவனம். உள்நாட்டிலேயே ராக்கெட்டுகளை உருவாக்குவதற்கான திறனுடன் ஸ்கைரூட் இயங்கி வருவதாக இதன் நிர்வாகிகள் கூறுகின்றனர்.
ஏவுகணைக்கான பொருட்கள் முழுவதும் உள்நாட்டிலேயே உருவாக்கப்படுகிறது. இந்தியாவில் உள்ள கைதேர்ந்த பொறியாளர்களை வைத்து சிறந்த முறையில் தயாரிக்கப்படுகிறது.
ஏவுகணைகளை இயக்குவதற்கான வழிகாட்டுதல்கள், கட்டுப்பாட்டு செயல்பாடுகள் உள்ளிட்டவைகளுக்கான மென்பொருளையும் ஸ்கைரூட் நிறுவனம் உருவாக்கியுள்ளது. 2021ம் ஆண்டின் இறுதியில் தனது முதல் ஏவுகணை குறித்த அறிமுகத்தை வெளியிடுவதற்காக ஸ்கைரூட் நிறுவனம் முனைப்புடன் இயங்கி வருகிறது.
உள்நாட்டில் ராக்கெட் தயாரிக்கும் முதல் தனியார் நிறுவனம் ஸ்கைரூட். ஓராண்டிற்குள் இதற்கான பரிசோதனை பணிகள் வெற்றிகரமாக நடைபெறும். எங்களுக்கும், நாட்டிற்கும் மைல்கல்லாக அமையும்.
விண்வெளி சார்ந்த பணிகளில் தனியாரின் பங்களிப்பிற்கு அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், ஸ்கைரூட் நிறுவனம் விண்ணை முட்டுவதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறது.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home