Saturday, February 27, 2021

‘ட்ரோபெக்ஸ்-21’ போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது இந்திய கடற்படை

 


இந்திய கடற்படை, இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மேற்கொள்ளும்  மிகப் பெரிய போர் பயிற்சியான ட்ரோபெக்ஸ் 21’-ல் (Theatre Level Operational Readiness Exercise (TROPEX 21) ல் ஈடுபட்டுள்ளது.

கடற்படையின் தயார் நிலையை மதிப்பீடு செய்வதற்காக இந்த பயிற்சி நடத்தப்படுகிறது. கடந்த ஜனவரி மாதம் முதல் தொடங்கிய இந்த பயிற்சி, பிப்ரவரி 3வது வாரத்தில் முடிகிறது.

இதில் கடற்படையின் போர்க்கப்பல்கள், நீர்மூழ்கி கப்பல்கள், விமானங்கள் உட்பட அனைத்து பிரிவுகளும், தரைப்படை, விமானப்படை, இந்திய கடலோர காவல் படையின் சில பிரிவுகளும் ஈடுபடுகின்றன

இந்தியப் பெருங்கடல் பகுதியில் இந்த பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது. கடற்படையின் தாக்குதல் திறன், நாட்டின் பாதுகாப்பு ஆகியவற்றை மதிப்பிடுவது, இந்திய பெருங்கடல் பகுதியில் அமைதி மற்றும் நிலைத்தன்மையை ஏற்படுத்துவது ஆகியவை  ‘ட்ரோபெக்ஸ் 21’ பயிற்சியின்  நோக்கம்.

இந்தப் பயிற்சியை  கடற்படையின் 3 கட்டுப்பாட்டு மண்டலங்கள், போர்ட் பிளேரில் உள்ள முப்படை கட்டுப்பாட்டு மையம் ஆகியவற்றுடன் இணைந்து கடற்படை தலைமையகம் மேற்பார்வையிடுகிறது.

மல்யுத்த வீரர்கள் தேர்வு:

உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில் உள்ள ஜாட் படைப்பிரிவு மையத்தின் ( JAT Regimental Centre) விளையாட்டு பிரிவு, மல்யுத்த வீரர்கள் தேர்வை மார்ச் 1ம் தேதி முதல் 6ம் தேதி வரை நடத்துகிறது. இதில் உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப், தில்லி, மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்கள் கலந்து கொள்ளலாம்.

Labels: ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home