Sunday, February 28, 2021

58 ஆண்டுகளுக்குப் பிறகு நாகாலாந்து சட்டப்பேரவையில் பாடப்பட்ட தேசிய கீதம்

 


கடந்த 1963-ம் ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி நாகாலாந்து தனி மாநிலமாக அறிவிக்கப்பட்டது. அதிலிருந்து தற்போது வரைநாகாலாந்து சட்டப் பேரவையில் தேசிய கீதம் பாடப்பட்ட தில்லை. இந்நிலையில் 58 ஆண்டுகளுக்குப் பிறகு சட்டப் பேரவையில் முதல் முறையாக தற்போது தேசிய கீதம் பாடப்பட்டுள்ளது.

இதனை பாதுகாப்பு ஆலோசகர் நிதின் ஏ. கோகலே தனதுட்விட்டர் பதவில் பகிர்ந்துள்ளார். தேசிய கீதத்தை ஒலிக்கவிட்டு அதற்கு மரியாதை செலுத்தும் விதமாக அனைவரும் எழுந்து நின்ற வீடியோ வைரலாகி வருகிறது.

இதுகுறித்து நாகாலாந்து சட்டப்பேரவை செயலர் அந்தோணி கூறும்போது, “பேரவையில் ஆளுநர் உரை நிகழ்த்துவதற்கு முன்னரும், பின்னரும் தேசிய கீதம் பாடப்படும். பெரும்பாலான மாநிலங்களில் இந்த முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் நாகாலாந்து சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் தேசியகீதம் இதுவரை பாடப்பட்டதில்லை. இதுவே முதல்முறையாகும். தேசிய கீதம் பாடப்படுவதற்கான முயற்சியை பேரவை சபாநாயகர் ஷரிங்கைன் லாங்குமெர் எடுத்தார்” என்றார்.



Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home